October 19, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > கல்முனை விவேகானந்தா தமிழ் வித்தியாலய வாணி விழாவும் கௌரவிப்பு நிகழ்வும்!

கல்முனை விவேகானந்தா தமிழ் வித்தியாலய வாணி விழாவும் கௌரவிப்பு நிகழ்வும்!

கல்முனை விவேகானந்தா தமிழ் வித்தியாலயத்தில் வாணி விழாவும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் இன்று (19.10.2026) பாடசாலை அதிபர் எஸ். தனராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக இடம்பெற்றன.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாகப் பிரதிக் கல்விப் பணிப்பாளரும், தமிழ் கோட்டக் கல்விப் பணிப்பாளருமான எஸ். சுரேஸ்குமார் கலந்துகொண்டார்.

மேலும், ஓய்வுபெற்ற அதிபர் கே. தயானந்தன், ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் கா. சாந்தகுமார், தரவை சித்திவிநாயகர் கண்ணகி அம்மன் ஆலயத் தலைவர் கி. நாகராஜா, ஓய்வுபெற்ற அதிபர் வீ. யோகராஜா மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி எஸ். கமலநாதன் ஆகியோரும் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

இந்து மாமன்றச் செயலாளர் திருமதி வீ. அலெக்சாண்டர் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *