அம்பாறை மாவட்ட செயலக நவராத்திரி பூசை நிகழ்வு 2026.10.19 இன்று மாவட்ட செயலாளர் அனுபம மங்கள விக்கிரம ஆரச்சி அவர்களின் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் சி. ஜெகராஜன் அவர்களின் வழிகாட்டலில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் சு. கரன் அவர்களின் ஒருங்கிணைப்பில் மூவின உத்தியோகத்தர்களும் அவர்களின் பிள்ளைகளும் கலந்து கொண்ட நவராத்திரி பூஜை ஆனது இந்து மன்ற உறுப்பினர்களின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் காரைதீவு பெண்கள் பாடசாலை மாணவிகளினால் நவராத்திரி பூஜை தொடர்பான நடனமும் பஜனை நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றன.
நவராத்திரி பூஜை நிகழ்வுகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட செயலக இந்து மன்றத்தினரின் பங்களிப்புடன் அம்பாறை மாணிக்க பிள்ளையார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்டு மாவட்ட செயலக பிரதான நுழைவு மண்டபத்தில் பூசை நடைபெற்றது.
நிகழ்வுகளில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கு அரசாங்க அதிபரினால் பரிசு பொருட்களும் உத்தியோகத்தர்களுக்கு ஆயுத பூஜையை முன்னிட்டு பேனை பென்சில்களும் வழங்கி வைக்கப்பட்டது.









