October 19, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > மூதூர் புனித அந்தோனியார் மகா வித்தியாலயத்தில் வாணி விழா சிறப்பாக நடைபெற்றது!

மூதூர் புனித அந்தோனியார் மகா வித்தியாலயத்தில் வாணி விழா சிறப்பாக நடைபெற்றது!

திருகோணமலை மாவட்டம், மூதூர் புனித அந்தோனியார் மகா வித்தியாலயத்தில் வாணி விழா நிகழ்வு இன்று (19) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

நவராத்திரி விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், பாடசாலையின் அதிபர் அருட்தந்தை கொன்ஃபூசியஸ் தலைமையில் காலை 10.30 மணியளவில் சரஸ்வதி பூஜை ஆரம்பமானது.

இதன்போது கல்வி, கலை மற்றும் அறிவின் அடையாளமாக விளங்கும் சரஸ்வதி தேவியை வழிபட்டு, மாணவர்களின் கல்வி முன்னேற்றம், அறிவுத்திறன் மற்றும் எதிர்கால வளர்ச்சிக்காகப் பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

பாடசாலைச் சமூகத்தின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்நிகழ்வு, மாணவர்களிடையே கலை, கலாசார மற்றும் ஆன்மிக விழுமியங்களை வளர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வாணி விழாவை முன்னிட்டு பாடசாலை வளாகத்தில் பக்திபூர்வமான சூழல் நிலவியதுடன், நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *