October 20, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் கலைவாணி கலை விழாவும்  கௌரவிப்பும்!

பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் கலைவாணி கலை விழாவும்  கௌரவிப்பும்!

​

​பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் கலைவாணி கலை விழாவும்  கௌரவிப்பும்!

​

பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் சரஸ்வதி வாணி விழாவும், மாணவர்களின் திறமைகளைப் போற்றும் பரிசளிப்பும் கெளரவிப்பும் இன்றைய தினம் (19.10.2026) பாடசாலைமுதல்வர் திரு. A.A. லோரன்ஸ் அவர்களின் தலைமையில், ஒன்று கூடல் வெளி அரங்கில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.  

​கல்வியோடு இணைந்த கலைத் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பாடசாலை மட்டத்தில் பல்வேறு போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசுகளும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். மேலும், மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்வுகளும் இடம்பெற்று விழாவை வண்ணமயமாக்கின.

​சிறப்பு கௌரவிப்பு:

இதன்போது, சமூக சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டுவரும் ‘உதவும் பொற்கரங்கள்’ அமைப்பின் தாயக இணைப்பாளர் திரு. N. சௌவியதாசன் அவர்களின் கல்வி சார்ந்த மற்றும் பொதுப் பணிகளைப் பாராட்டி, பல்வேறு பொது அமைப்புகளுடன் இணைந்து அவர் வழங்கும் சேவைகளைச் சிறப்பிக்கும் முகமாக பாடசாலை சமூகத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி நினைவுச்  சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

​இந்நிகழ்வில் வலய கல்வி அலுவலகத்தின் கல்வி ஆலோசகர் (இந்து சமயம்) திரு. மா. லக்குணம் பிரதான அதிதியாகக் கலந்துகொண்டதுடன், பாடசாலை மேம்பாட்டு இணைப்பாளர் திரு. G. ஜோதிராஜா கௌரவ அதிதியாகவும், இந்து கலாசார திணைக்கள வளவாளர் திரு. நா. சனாதனன் சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், ஆலயங்களின் பரிபாலன சபையினர், கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.  

​விழாவின் இறுதியில் நன்றியுரையுடன் நிகழ்வுகள் யாவும் வெற்றிகரமாக நிறைவுபெற்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *