October 25, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: Kethees

தான் கல்வி கற்ற அதே துறையில் விரிவுரையாளரான சம்மாந்துறை இளம் பெண்

தில்சாத் பர்வீஸ் சம்மாந்துறையைச் சேர்ந்த எஸ்.எல். பாத்திமா றுக்ஸானா, தான் மாணவியாக கல்வி கற்ற தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையிலேயே விரிவுரையாளராகப் பதவியேற்று, தனது கல்விப் பயணத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். சம்மாந்துறை அல் – மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை)யில் தனது பாடசாலைக் கல்வியை நிறைவு செய்த பாத்திமா றுக்ஸானா, 2016ஆம் ஆண்டு தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி, தகவல் தொழில்நுட்பத் துறையில் தனது உயர் கல்வியைத் தொடர்ந்துள்ளார். அதே […]

Read More

“கிழக்கின் கலைச்சங்கமம்” பண்பாட்டு பெருவிழா -2026

​ ​சௌவியதாசன் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கல்முனை (S) பிரதேச செயலகமும் இணைந்து நடத்தும் “கிழக்கின் கலைச்சங்கமம்” (EASTERN ART FUSION) கலை, கலாசார விழாவானது வரும் அக்டோபர் 06 முதல் 10 ஆம் திகதி வரை சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. ​கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திருமதி. மேனகா புவிக்குமார் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வுகள் நாள்தோறும் பிற்பகல் 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை […]

Read More

“பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப்பிள்ளையார் திருத்தலமும்” நூல் வெளியீடு

(செல்வி வினாயகமூர்த்தி) அக்கரைப்பற்று பனங்காடு கலாபூஷணம், ஆய்வார்வலர் நா. நவநாயகமூர்த்தி எழுதிய “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப்பிள்ளையார் திருத்தலமும்” எனும் வரலாற்று ஆய்வு நூலின் வெளியீட்டு விழா இன்று (04.10.2026) ஞாயிற்றுக்கிழமை வீரமுனை சுவிஸ் கிராண்ட் மஹாலில் நடைபெற்றது. வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், வீரமுனையின் பண்டைய வரலாறு மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சிந்தாயாத்திரைப்பிள்ளையார் திருத்தலத்தின் வரலாற்றுப் பின்னணி, பண்பாடு மற்றும் ஆய்வுத் தகவல்களை உள்ளடக்கிய நூல் வெளியிடப்பட்டது. நூலின் முதல் பிரதியை […]

Read More

அனோஜனின் மரண தண்டனையை குறைப்பதற்கான முயற்சி – சவுதி அரேபியாவுக்கு நாளை செல்லும் நான்கு பேர் கொண்ட குழு

கொழும்பு: கல்முனை, நட்பிட்டிமுனையைச் சேர்ந்த அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை மாற்றுவதற்கான முயற்சியின் ஒரு கட்டமாக, ஜனாதிபதி சட்டத்தரணிகள் இருவர் உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட குழுவொன்று எதிர்வரும் திங்கட்கிழமை (05) சவுதி அரேபியாவுக்குப் பயணமாகவுள்ளது. குறித்த குழுவில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சவுதி அரேபியாவைச் சென்றடையும் இக்குழுவினர், அங்குள்ள இரண்டு சட்டத்தரணிகள் சங்கங்களின் பிரதிநிதிகளை எதிர்வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை சந்தித்து, அனோஜனின் தண்டனையை மாற்றுவது […]

Read More

புனித செபமாலை அன்னை திருத்தல ஐப்பசி மாதத் திருவிழா

திருக்குடும்ப ஆண்டை முன்னிட்டு புனித செபமாலை அன்னை திருத்தலத்தின் 2026ஆம் ஆண்டுக்கான ஐப்பசி மாதத் திருவிழா ஒக்டோபர் 1ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. நாளை ஒக்டோபர் 4ஆம் திகதி திருவிழா கூட்டுத்திருப்பலியுடன் சிறப்பாக நடைபெறவுள்ளது. . . நாளை ஒக்டோபர் 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு திருவிழா கூட்டுத்திருப்பலி நடைபெறும். எகேட் காரித்தாஸ் இயக்குநர் அருட்தந்தை அன்றனி ஜெயராஜ் தலைமையில் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. திருவிழா தொடர்பான மேலதிக தகவல்களுக்கு பங்குத்தந்தையைத் தொடர்புகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். […]

Read More

இறக்காமம் பிரதேச செயலகத்தின் பாரம்பரியக் கலைநிகழ்வும் நூலக நிறுவனத்தின் கெளரவிப்பு நிகழ்வும் – 2026

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் ‘வத்ஸர பியவர’ வேலைத்திட்டத்தின் கீழ், பாரம்பரிய மற்றும் கிராமியக் கலைகளைப் பாதுகாத்து, அவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டுசெல்லும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட பாரம்பரியக் கலைநிகழ்வும் நூலக நிறுவனத்தின் கெளரவிப்பு நிகழ்வும் 2026.09.30 புதன்கிழமை இறக்காமம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது. பாரம்பரியக் கலை வடிவங்களின் முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துவதுடன், அழிந்துவரும் கிராமியக் கலை மரபுகளைப் பாதுகாத்து, அவற்றை எதிர்கால சந்ததியினரிடம் கொண்டுசெல்லும் நோக்கிலும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. […]

Read More

ஞானசார தேரர் களுத்துறையில் கைது

ஞானசார தேரர் களுத்துறை, தினியாவல பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் அவரை முன்னிலைப்படுத்துவதற்காகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் அடிப்படையிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

சிறப்பாக ஆரம்பமான கிழக்கு பல்கலைக்கழக 30 வது  பொதுப் பட்டமளிப்பு விழா !

வேட்டியுடன் வேந்தர் மௌனகுரு கைகூப்பி வரவேற்று 285  பேருக்கு பட்டங்களை வழங்கினார்!!  ( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று 3ஆம் திகதி சனிக்கிழமை காலை ஆரம்பமானது. பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ப.பிரதீபன் முன்னிலையில், ஜனாதிபதியினால் புதிதாக நியமிக்கப்பட்ட வேந்தர் பேராசிரியர் சி.மௌனகுரு தலைமையில் ஆரம்பமானது. புதிய வேந்தர் பேராசிரியர் சின்னையா மௌனகுரு பாரம்பரிய வேட்டி வாலாமணி அணிந்து  அனைவரையும் கைகூப்பி வரவேற்று காலையில் முதல் அமர்வில் 285 பேருக்கு பேருக்கு […]

Read More

முஸ்லிம் காங்கிரஸின் புதிய சட்டத்தரணிகள் அமைப்பு-தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் தொடக்க நிகழ்வு

பாறுக் ஷிஹான் மக்களுக்குச் சட்ட உதவி வழங்கவும் நீதித்துறை சுயாதீனத்தைப் பாதுகாக்கவும் முஸ்லிம் காங்கிரஸின் புதிய சட்டத்தரணிகள் அமைப்புதலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் தொடக்க நிகழ்வு; கட்சியின் முக்கியஸ்தர்கள்  சட்டத்தரணிகள் பங்கேற்பு சமூகம் மற்றும் பொதுமக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்குச் சட்ட ரீதியாகத் தலையீடு செய்து தீர்வு காண்பதற்காகவும்  பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சட்ட உதவிகளை வழங்குவதற்காகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உத்தியோகபூர்வச் ‘சட்டத்தரணிகள் அமைப்பு’ உருவாக்கப்பட்டு  அதன் அங்குராப்பண நிகழ்வும் விசேட கலந்தரையாடலும் கட்சியின் தலைவர்இ பாராளுமன்ற […]

Read More