October 25, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: Kethees

சொறிக்கல்முனை அன்னை தெரேசா பாலர் பாடசாலையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட ஆசிரியர் தினம்!

-க.டினேஸ்- சொறிக்கல்முனை அன்னை தெரேசா பாலர் பாடசாலையில் இன்று ஆசிரியர் தினம் மிகச் சிறப்பாகவும், மகிழ்ச்சியான முறையிலும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்புடன், தமது அருமையான சேவையினை வழங்கி வரும் மூன்று ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர். இதன்போது பெற்றோர்களினால் ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து, மாணவர்களினால் அழகிய பூங்கொத்து வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆசிரியர்களினால் கேக் வெட்டப்பட்டு, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து மகிழ்ச்சியுடன் ஆசிரியர் தினத்தை கொண்டாடினர். மேலும், […]

Read More

சொறிக்கல்முனை திருச்சிலுவை பலர் பாடசாலை சிறுவர் தின நிகழ்வு

சொறிக்கல்முனை திருச்சிலுவை பலர் பாடசாலையின் சிறுவர் தினம் பாடசாலை அதிபர் அருசகோதரி கோசலா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது இன் நிகழ்வில் பாடசாலை மாணவர்களது நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது இன் நிகழ்வில் விசேட அதிதிகளாக நாவிதன்வெளி பிரதேசசபை உப தவிசாளர் கு. புவனரூபன், சமூக சேவையாளர் கண்ணதாசன்சொறிக்கல்முனை கன்னியார்மட தலைவி அருட்சகோதரி ஜோதினி ஆகியோரும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்ததோடு உப தவிசாளர் கு.புவனாருபன் அவர்களால் மாணவர்களுக்கு சிறுவர்தின பரிசாக குடைகளும் வழங்கப்பபட்ட்ன.

Read More

சுகாதார தகவல்கள் மக்களிடம் சென்றடையவைத்தவர்களுக்கு விருதுகள்

( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார தகவல்கள் சிறப்பாக மக்களிடம் சென்றடைய முகப்புத்தகம் மூலம் வழங்கியமைக்காகவும், சுகாதார தகவல் மையங்கள் மூலமும் சுகாதார தகவல்களை சிறப்பாக வழங்கியமைக்காகவும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் இரா.முரளீஸ்வரன் தலைமையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையில் நேற்று 05. 10.2026 அன்று விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மட்டக்களப்பு பிராந்திய வைத்தியசாலைகள், சுகாதார வைத்திய அதிகாரி நிறுவனங்கள் மற்றும் விசேட சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு இவை வழங்கப்பட்டன. உலக சுகாதார […]

Read More

தமிழர் பண்பாட்டியலோடு மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கம் நடாத்திய சர்வதேச சிறுவர் தின விழா

( வி.ரி. சகாதேவராஜா) மட்டக்களப்புத் தமிழர் பண்பாட்டியலோடு தமிழ்ச்சங்கம் நடாத்திய சிறுவர் தின விழா காரைதீவு விபுலானந்த மொன்டிசோரி சிறுவர்கள் சகிதம் (04) ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக மொன்டிசோரி மாணவர்களை நிறைமுட்டி பொட்டுச் சந்தனம் சாத்தி பன்னீர் தெளித்து அத்தனை மாணவர்களுக்கும் மாலைகள் சூட்டி வரவேற்றார்கள். காரைதீவு விபுலானந்தா மொன்டிசூரி மாணவர்கள் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வு மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க மண்டபம், பிள்ளையாரடியில் நடைபெற்றது.  மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் சைவப்புரவலர் தேசகீர்த்திவி. ரஞ்சிதமூர்த்தி […]

Read More

சுகாதார அமைச்சர் நளிந்த, ஸ்ரீ சத்திய சாயி சஞ்சீவினி வைத்தியசாலைக்கு விசேட பாராட்டு!

செயலாளர் அனில் ஜாசிங்க நேரில் சென்று கையளிப்பு!! ( வி.ரி.சகாதேவராஜா) சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ  ஸ்ரீ சத்திய சாயி சஞ்சீவினி வைத்தியசாலையின் தன்னலமற்ற இலவச இதய சிகிச்சைகள் பணிக்காக விசேட பாராட்டு விருதினை வழங்கியுள்ளார். அமைச்சரின் விசேட பாராட்டு விருதினை சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க நேற்று முன்தினம் மட்டக்களப்பு கிரான்குளத்திற்கு நேரடியாக சென்று கையளித்தார். மட்டக்களப்பு கிரான்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சத்திய சாயி சஞ்சீவினி வைத்தியசாலையில் மக்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வரும் […]

Read More

மருதமுனையில் அறுவைக்காக வைக்கப்பட்டிருந்த எருமை மாடுகள் மீட்பு; இருவர் கைது – சம்மாந்துறை பொலிஸார் விசாரணை.

(ஜலீல் ஜீ) சம்மாந்துறை தென்னம்பிள்ளை கிராமம் 2, இல.180 முகவரியில் வசிக்கும் கலந்தர் லெப்பை அப்துல் றசூல் என்பவருக்குச் சொந்தமான 12 எருமை மாடுகள் கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி காணாமல் போனமை தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த மாடுகள் கல்முனை ஊடாக மருதமுனைப் பகுதியில் அறுவைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை பொலிஸாரின் இரகசிய விசாரணைகளையடுத்து, மருதமுனையைச் சேர்ந்த 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது […]

Read More

போரதீவுப்பற்று கலாசார மத்திய நிலைய மாணவர்கள் தேசிய போட்டிக்கு தெரிவு!

கிழக்கு மாகாண கலாசார மத்திய நிலையங்களுக்கிடையிலான போட்டியில் போரதீவுப்பற்று கலாசார மத்திய நிலைய மாணவர்களும் தேசிய போட்டிக்கு தெரிவாகியுள்ளனர். புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண கலாசார மத்திய நிலையங்களுக்கிடையிலான பிரதேச சங்கீத, நடனப் போட்டிகள் கடந்த 03.10.2029 அன்று செங்கலடி மத்திய கல்லூரியில் இடம்பெற்றன. போரதீவுப்பற்று கலாசார மத்திய நிலைய  மாணவர்களும் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று, தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர். சங்கீதப் போட்டிகளில்:  2ஆம் இடம் இவ்வெற்றியைப் பெற்ற மாணவர்களுக்கும், அவர்களைப் பயிற்றுவித்த சங்கீத வளவாளர் விதுஷன் சர்மாவுக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகளைப் பெற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்.

Read More

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ரூ.6 இலட்சம் பெறுமதியான குடிநீர் உபகரணங்கள் நன்கொடை!

சிவகுமார் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நோயாளிகள், பொதுமக்கள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் பயன்பாட்டிற்காக சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று நவீன குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் அபேக்ஷா அமைப்பினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் ஆர். முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், டாக்டர் ஏ.சி.எம். முகம்மது அவர்களினால் இந்த உபகரணங்கள் மனமுவந்து நன்கொடையாக வழங்கப்பட்டன. சுடுநீர், குளிர்நீர் மற்றும் சாதாரண குடிநீர் ஆகியவற்றை வழங்கக்கூடிய இந்த Water Purifier உபகரணங்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் […]

Read More

அனோஜன் சிறையில் தாக்கப்பட்டார்?அனோஜனின் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்த கோரிக்கை!

சவுதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளதாகவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மிகவும் கவலைக்குரிய தகவல் வெளியாகியுள்ளது. அனோஜனின் விடயத்தில் செயல்பட்டு வரும் சமூக ஆர்வலர் ரஜிவ்காந்த் அவரது முகப்புத்தகத்தில் இந்த தகவலை பகிர்ந்து உள்ளார் அத்துடன் அனோஜன் விடயத்தில் செயல்படுகின்ற சமூக ஆர்வலர்களில் ஒருவரான Eng சிவதர்சன் கல்முனை நெற்றுக்கு தெரிவிக்கையில் இந்த விடயத்தை குடும்பம் சார்பாக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் தூதரக […]

Read More

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் உலக முதியோர் தினக் கொண்டாட்டம்: சிரேஷ்ட பிரஜைகள் #கௌரவிப்பு!

#உலக முதியோர் தினத்தை சிறப்பிக்கும் வகையில், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளைக் கௌரவிக்கும் நிகழ்வும், உடற்பயிற்சி உள்ளிட்ட கலை நிகழ்வுகளும் வைத்தியசாலையில் (02.10.2026) வெகுவிமர்சையாக இடம்பெற்றது. சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் சனுஸ் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். மேலும், பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் […]

Read More