October 5, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் உலக முதியோர் தினக் கொண்டாட்டம்: சிரேஷ்ட பிரஜைகள் #கௌரவிப்பு!

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் உலக முதியோர் தினக் கொண்டாட்டம்: சிரேஷ்ட பிரஜைகள் #கௌரவிப்பு!

  • றியாஸ் ஆதம்

#உலக முதியோர் தினத்தை சிறப்பிக்கும் வகையில், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளைக் கௌரவிக்கும் நிகழ்வும், உடற்பயிற்சி உள்ளிட்ட கலை நிகழ்வுகளும் வைத்தியசாலையில் (02.10.2026) வெகுவிமர்சையாக இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் சனுஸ் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

மேலும், பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், பிராந்திய தொற்றா நோய் தடுப்புப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எஸ்.எம்.பௌசாத் ஆகியோர் விசேட அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த சிரேஷ்ட பிரஜைகள் கலந்து சிறப்பித்ததுடன், அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன. அத்துடன், முதியோர்களின் உடல்நலனை மேம்படுத்தும் நோக்கில் காலை உடற்பயிற்சி நிகழ்வுகள் மற்றும் இலவச மருத்துவப் பரிசோதனைகளும் இடம்பெற்றதுடன், அவர்களுக்கு வைத்திய ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

சிரேஷ்ட பிரஜைகளின் மனமகிழ்ச்சியையும் சமூகப் பங்கேற்பையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இந்நிகழ்வில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *