October 7, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > சுகாதார தகவல்கள் மக்களிடம் சென்றடையவைத்தவர்களுக்கு விருதுகள்

சுகாதார தகவல்கள் மக்களிடம் சென்றடையவைத்தவர்களுக்கு விருதுகள்


( வி.ரி.சகாதேவராஜா)

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார தகவல்கள் சிறப்பாக மக்களிடம் சென்றடைய முகப்புத்தகம் மூலம் வழங்கியமைக்காகவும், சுகாதார தகவல் மையங்கள் மூலமும் சுகாதார தகவல்களை சிறப்பாக வழங்கியமைக்காகவும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் இரா.முரளீஸ்வரன் தலைமையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையில் நேற்று 05. 10.2026 அன்று விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மட்டக்களப்பு பிராந்திய வைத்தியசாலைகள், சுகாதார வைத்திய அதிகாரி நிறுவனங்கள் மற்றும் விசேட சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு இவை வழங்கப்பட்டன.

உலக சுகாதார நிறுவனம் நோயாளர் பாதுகாப்பு தினமாக புரட்டாதி 19 ம் திகதியை பிரகடனப்படுத்தி அம்மாதகாலங்களில் பல்வேறுபட்ட ஆக்க பூர்வமான நிகழ்வுகளை நடாத்தி வருகின்றனர்.

இவ்வாறான ஊக்குவிப்பு நிகழ்வுகள் மேலும் மேலும் மக்களுக்கான தகவல்களை சிறப்பாக வழங்க உந்துகோலாக அமைவதாகவும், தகவல்கள் இலகு முறையில் மக்களுக்கு எடுத்து செல்லப்படுவதால் மக்கள் சேவைகளை விரைவாக அறிந்து கொண்டு முன்கூட்டியே நோய்களுக்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் எனவும் பணிப்பாளரினால் கூறப்பட்டது.

இந்நிகழ்வானது பணிமனையின் தரம் மற்றும் பாதுகாப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி ஜே.சகாயதர்ஷினியால் ஒருங்கிணைக்கப்பட்டு நடாத்தப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *