October 5, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > அனோஜன் சிறையில் தாக்கப்பட்டார்?அனோஜனின் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்த கோரிக்கை!

அனோஜன் சிறையில் தாக்கப்பட்டார்?அனோஜனின் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்த கோரிக்கை!

சவுதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளதாகவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மிகவும் கவலைக்குரிய தகவல் வெளியாகியுள்ளது.

அனோஜனின் விடயத்தில் செயல்பட்டு வரும் சமூக ஆர்வலர் ரஜிவ்காந்த் அவரது முகப்புத்தகத்தில் இந்த தகவலை பகிர்ந்து உள்ளார் அத்துடன் அனோஜன் விடயத்தில் செயல்படுகின்ற சமூக ஆர்வலர்களில் ஒருவரான Eng சிவதர்சன் கல்முனை நெற்றுக்கு தெரிவிக்கையில் இந்த விடயத்தை குடும்பம் சார்பாக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் தூதரக அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தியுள்ளதாக கூறினார்

அவர் மீண்டும் தாக்கப்படக்கூடிய அபாயம் இருப்பதாகவும், சிறைச்சாலைக்குள் அவரது உயிருக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய சூழ்நிலை இருப்பதாகவும் தீவிரமான கவலை எழுந்துள்ளது.

எனவே சவுதி அரேபிய சிறைச்சாலை அதிகாரிகள், இலங்கை அரசு, வெளிவிவகார அமைச்சு மற்றும் சவுதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, அனோஜனின் உயிருக்கும் உடல் பாதுகாப்பிற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அவசரமாகக் கேட்டுக்கொள்கிறேன்.

அவர் மீதான வழக்கு அல்லது வழங்கப்பட்டுள்ள தண்டனை எதுவாக இருந்தாலும், அரச காவலில் இருக்கும் ஒருவரின் உயிரையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டியது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பொறுப்பாகும்.

அவருக்கு ஏற்பட்டுள்ள காயங்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதுடன், இந்தத் தாக்குதல் தொடர்பாக உரிய விசாரணையும் தாமதமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும் ஒரு பாரதூரமான சம்பவம் நடைபெறுவதற்கு முன்னர் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

URGENT: ANOJAN’S SAFETY MUST BE ENSURED

I have received deeply concerning information that Sivarasa Anojan, who is currently facing a death sentence in Saudi Arabia, has been attacked by other inmates in prison and has sustained injuries to his head.

There are serious concerns for his safety, including the possibility of further attacks against him while in custody.

I urgently request the Saudi Arabian prison authorities, the Government of Sri Lanka, the Ministry of Foreign Affairs, and the Sri Lankan Embassy in Saudi Arabia to intervene immediately and take all necessary measures to ensure Anojan’s safety and physical protection.

Regardless of the case against him or the sentence imposed, his life and safety while in state custody must be protected.

I also request that he be provided with immediate medical attention for his injuries and that the circumstances surrounding the reported attack be investigated without delay.

This matter requires immediate attention. Please act before another serious incident occurs.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *