October 7, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > தமிழர் பண்பாட்டியலோடு மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கம் நடாத்திய சர்வதேச சிறுவர் தின விழா

தமிழர் பண்பாட்டியலோடு மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கம் நடாத்திய சர்வதேச சிறுவர் தின விழா

( வி.ரி. சகாதேவராஜா)

மட்டக்களப்புத் தமிழர் பண்பாட்டியலோடு தமிழ்ச்சங்கம் நடாத்திய சிறுவர் தின விழா காரைதீவு விபுலானந்த மொன்டிசோரி சிறுவர்கள் சகிதம் (04) ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு கோலாகலமாக நடைபெற்றது.

முன்னதாக மொன்டிசோரி மாணவர்களை நிறைமுட்டி பொட்டுச் சந்தனம் சாத்தி பன்னீர் தெளித்து அத்தனை மாணவர்களுக்கும் மாலைகள் சூட்டி வரவேற்றார்கள்.

காரைதீவு விபுலானந்தா மொன்டிசூரி மாணவர்கள் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வு மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க மண்டபம், பிள்ளையாரடியில் நடைபெற்றது.

 மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் சைவப்புரவலர் தேசகீர்த்திவி. ரஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெற்ற விழாவில்,  மொன்டிசோரி பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா சிறப்புரையாற்றினார்.

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவன மாணவி செல்வி எஸ்.ரோகினியின் தமிழ் தாய் வணக்கம் முழங்க மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி பிரசாந்தன் சிறப்பு சொற்பொழிவாற்ற நிகழ்வு களைகட்டியது.

சிறுவர்கள் அனைவருக்கும் சிறுவர் தின அன்பளிப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

 மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க நிருவாகிகள் மொன்டிசோரி ஆசிரியர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *