-க.டினேஸ்-
சொறிக்கல்முனை அன்னை தெரேசா பாலர் பாடசாலையில் இன்று ஆசிரியர் தினம் மிகச் சிறப்பாகவும், மகிழ்ச்சியான முறையிலும் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்புடன், தமது அருமையான சேவையினை வழங்கி வரும் மூன்று ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது பெற்றோர்களினால் ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து, மாணவர்களினால் அழகிய பூங்கொத்து வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆசிரியர்களினால் கேக் வெட்டப்பட்டு, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து மகிழ்ச்சியுடன் ஆசிரியர் தினத்தை கொண்டாடினர்.
மேலும், மாணவர்களுக்கு சிற்றுண்டிகள் வழங்கப்பட்டதுடன், மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டும் வகையில் பெற்றோர்கள் சார்பில் அன்பளிப்பும் வழங்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு தங்களது அன்பும் நன்றியும் வெளிப்படுத்தப்பட்டது.
“ஒரு குழந்தையின் எதிர்காலத்தை உருவாக்கும் முதல் வழிகாட்டிகள் ஆசிரியர்களே” என்ற உண்மையை எடுத்துரைக்கும் வகையில், சிறார்களின் கல்வி மற்றும் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு இந்நாளில் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டன.
இந்நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்து, மகிழ்ச்சியுடனும் ஒற்றுமையுடனும் முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.
அறிவை விதைத்து, அன்பை வளர்த்து, சிறார்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இனியh ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்









