October 25, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: Kethees

அஷ்ஷெய்க் F.M. அஹ்மதுல் அன்ஸார் மௌலானா நளீமியின் இழப்பு சமூகத்துக்கு பெரு வெற்றிடமே – அதிபர் ஏ.ஜி.எம். றிசாத் இரங்கல்

சமூக, சமயத் தலைவரும் கல்விமானும் ஆகிய மருதமுனையைச் சேர்ந்த அஷ்-ஷெய்க் F.M. அஹ்மதுல் அன்ஸார் மௌலானா நளீமி அவர்கள் நேற்று(09.10.2026) இறைவன் அழைப்பை ஏற்றுக்கொண்டார். இந்த செய்தி முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது என சமூக வலுவூட்டலுக்கான பல்லின ஒன்றியத்தின் செயலாளரும் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின்(MWRAF) முக்கிய செயற்பாட்டாளருமான அதிபர் ஏ.ஜி.எம். றிசாத் அவர்கள் ஊடகங்களுக்கு விடுத்த அனுதாபச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது அனுதாபச் செய்தியில் , அஷ்-ஷெய்க் F.M. […]

Read More

சவூதி உச்ச நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை; மன்னரிடம் விசேட மனு சமர்ப்பிக்கவும் திட்டம்:அரசு தீவிர முயற்சி

அனோஜன் சிவராசாவின் மரண தண்டனைக்கு எதிரான மேன்முறையீடு இன்று தாக்கல்! சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவின் தண்டனையை இரத்துச் செய்யக் கோரும் மேன்முறையீடு இன்று சவூதி அரேபிய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இந்த விவகாரம் தொடர்பில் சவூதி அரேபிய சட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடுவதற்காக, மேலதிக சொலிசிட்டர் ஜெனரலும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அசாத் நவாவி மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும, பைசர் முஸ்தபா ஆகியோர் அடங்கிய இலங்கை சட்டக் குழுவினர் […]

Read More

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல்.

(செல்வி வினாயகமூர்த்தி) இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வணிக நிர்வாகப் பீடத்தில், மாணவர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்களின் கைத்தொழில் மற்றும் வியாபார முயற்சிகளை மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் வியாழக்கிழமை (08) இடம்பெற்றது. வணிக நிர்வாகப் பீடத்தின் பீடாதிபதி Mrs.ஜெலீல் சல்பியா தலைமையில், பீடாதிபதியின் அலுவலக மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், சம்சம் பவுண்டேஷன் (Zam Zam Foundation) பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச மனித உரிமை பாதுகாப்பு அமைப்பின் பெண்கள் மற்றும் சிறுவர் உரிமை தொடர்பான செயற்திட்ட உத்தியோகத்தரும் நுஜா ஊடக […]

Read More

சிறப்புக்கட்டுரை -உலக மனநல தினம் (அக்டோபர் 10): இலங்கையின் மனநலச் சவால்களும் உலகளாவிய ஒப்பீடும் -ஏ.கங்காதரன் (MBA)

உலக மனநல தினம் (அக்டோபர் 10): இலங்கையின் மனநலச் சவால்களும் உலகளாவிய ஒப்பீடும் ஆசிரியர்: ஏ.கங்காதரன் (MBA), பொருளாதார மற்றும் சமூகவியல் ஆய்வாளர் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 ஆம் திகதி உலக மனநல தினம் (World Mental Health Day) உலகெங்கிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக மனநல சம்மேளனம் (World Federation for Mental Health – WFMH) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றால் 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நாளின் முக்கிய நோக்கம், […]

Read More

அனோஜன் விவகாரம் – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நேரடிக் கவனத்திற்குக் கொண்டுசெல்ல நடவடிக்கை – தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதி

சவுதி அரேபியாவில் மரண தண்டனை தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள சிவராஜா அனோஜனின் விடுதலை அல்லது தண்டனைக் குறைப்பைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரத்தை இந்தியப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் நேரடிக் கவனத்திற்குக் கொண்டுசென்று, உரிய மனிதாபிமானத் தலையீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் திரு. நடராசா ரவிகுமார் அவர்களும், ஐக்கிய மக்கள் முன்னணியின் ஸ்தாபகரும் செயலாளர் நாயகமும் நாவிதன்வெளி […]

Read More

மாகாண மட்ட ஆங்கில மொழிப் போட்டியில் கல்முனை கார்மேல் பற்றிமா மாணவன் சங்கரதாசன் மேசியன் முதலிடம் பெற்று சாதனை!

சௌவியதாசன் ​கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் (Provincial aà of Education – Eastern Province) நடாத்தப்பட்ட மாகாண மட்ட ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டிகள் – 2026 (Provincial Level English Language and Drama Competitions – 2026) நிகழ்வின் ஆங்கில படைப்பாற்றல் எழுத்துப் போட்டிகளுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. ​இப்போட்டியில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையைச் சேர்ந்த தரம் 6ல் கல்விபயிலும் மாணவன் சங்கரதாசன் மேசியன் மாகாண மட்டத்தில் […]

Read More

மருதமுனை கடற்கரையில்   ஆண் சடலம் மீட்பு குடிபோதையில் கடலில் இறங்கியதாகக் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தகவல்

பாறுக் ஷிஹான் மருதமுனை கடற்கரை ஓரத்தில் வெள்ளிக்கிழமை (09) மாலை 66 வயதுடைய ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகப் பெரியநீலாவணைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாண்டிருப்பு – 02, கிருஷ்ணா வீதியைச் சேர்ந்த ஆறுமுகம் கிருபாகரன்   என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: குறித்த நபர் வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.40 மணியளவில் பாண்டிருப்பு – 02 விஷ்ணு கோவிலுக்கு அருகாமையிலுள்ள கடற்கரைப் பகுதிக்குக் குளிப்பதற்காகச் சென்றுள்ளார். இதன்போது எதிர்பாராதவிதமாக அவர் நீரில் மூழ்கி அடித்துச் […]

Read More

கொழும்பு முன்னாள் பிரதம நீதவான் திலிண கமகே நீதிச்சேவையில் இருந்து முற்றாக நீக்கம்

tamilwin – thanks கொழும்பு முன்னாள் பிரதம நீதவானாக கடமையாற்றிய திலிண கமகே நீதிச்சேவையில் இருந்து முற்றாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட்டாக பணியாற்றிய திலிண கமகே பின்னாளில் கொழும்பு பிரதான நீதவானாகவும், மொரட்டுவை பிரதான நீதவானாகவும் கடமையாற்றியிருந்தார். சேவையிலிருந்து நீக்கம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், திலிண கமகே மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அவர் தற்காலிகமாகசேவையிலிருந்து நீக்கம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், திலிண […]

Read More

தங்கம் வென்ற இரு காரைதீவு பல்கலைக்கழக மாணவிகள்!

( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு மாணவிகள் இருவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்கள். ஒருவர் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும் மற்றவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக பொறியியல் பீடத்திலும் தங்கப் பதக்கத்தை பெற்று ஊருக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். முதலாமவர் செல்வி சகாதேவராஜா டிவானுஜா, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாம் கட்ட MBBS பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்றமைக்காக “செல்லத்தங்கம் தம்பிப்பிள்ளை நினைவு தங்கப் பதக்கம் – 2026” விருதுக்கு தெரிவு செய்யப்பட்டு கடந்த 4 ஆம் […]

Read More

அனோஜன் மரண தண்டனை விவகாரம்: கல்முனை பொலிஸார் விசேட அறிவிப்பு!

பாறுக் ஷிஹான் சமூக வலைத்தளங்களில் அவதூறான பதிவுகள் மற்றும் முரண்பாடான கருத்தாடல்களைத் தவிர்க்குமாறு கோரிக்கை சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜனைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவருக்கு தொடர்பான தேவையற்ற முகநூல் பதிவுகள் மற்றும் முரண்பாடான கருத்தாடல்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப் பொலிஸார் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர். கல்முனை பொலிஸ் பிரிவில் வசித்து வந்த சிவராசா அனோஜனை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்காக இலங்கை அரசாங்கம், சிவில் அமைப்புகள் மற்றும் சர்வதேசப் […]

Read More