சௌவியதாசன்
கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் (Provincial aà of Education – Eastern Province) நடாத்தப்பட்ட மாகாண மட்ட ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டிகள் – 2026 (Provincial Level English Language and Drama Competitions – 2026)
நிகழ்வின் ஆங்கில படைப்பாற்றல் எழுத்துப் போட்டிகளுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.
இப்போட்டியில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையைச் சேர்ந்த தரம் 6ல் கல்விபயிலும் மாணவன் சங்கரதாசன் மேசியன் மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கும் பிராந்தியத்திற்கும் பெரும் பெருமை சேர்த்துள்ளார்.
குறிப்பிட்ட இம்மாணவன், அண்மையில் நடைபெற்ற மாவட்ட மட்டப் போட்டியிலும் முதலாம் இடத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாவட்ட மட்டப்
போட்டியின்
தொடர்ச்சியாக மாகாண மட்டத்திலும் தன் திறமையை நிரூபித்து, மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றித் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
மாணவன் சங்கரதாசன் மேசியனின் இந்த தொடர் சாதனைக்காக பாடசாலை அதிபர், ஆசிரியர்கள்,பாடசாலை நிருவாகத்தினர் அவரை ஊக்கப்படுத்தியதோடு மாணவர்கள் மற்றும் பெற்றோர் தமது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இப் போட்டிக்கான பரீட்சைகள் கடந்த மாதம் காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
