October 10, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > கொழும்பு முன்னாள் பிரதம நீதவான் திலிண கமகே நீதிச்சேவையில் இருந்து முற்றாக நீக்கம்

கொழும்பு முன்னாள் பிரதம நீதவான் திலிண கமகே நீதிச்சேவையில் இருந்து முற்றாக நீக்கம்

tamilwin – thanks

கொழும்பு முன்னாள் பிரதம நீதவானாக கடமையாற்றிய திலிண கமகே நீதிச்சேவையில் இருந்து முற்றாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட்டாக பணியாற்றிய திலிண கமகே பின்னாளில் கொழும்பு பிரதான நீதவானாகவும், மொரட்டுவை பிரதான நீதவானாகவும் கடமையாற்றியிருந்தார்.

சேவையிலிருந்து நீக்கம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், திலிண கமகே மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அவர் தற்காலிகமாகசேவையிலிருந்து நீக்கம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், திலிண கமகே மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அவர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் திலிண கமகேவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை செய்த நீதிச்சேவை ஆணைக்குழு, அவர் மீதான சகல குற்றச்சாட்டுகளும் உண்மையானவை என்றும் அவர் குற்றவாளி என்றும் கண்டறிந்துள்ளது.

அதன் பிரகாரம் இன்று(09.10.2026) தொடக்கம் திலிண கமகே நீதிச்சேவையில் இருந்து முற்றாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *