October 10, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > மருதமுனை கடற்கரையில்   ஆண் சடலம் மீட்பு குடிபோதையில் கடலில் இறங்கியதாகக் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தகவல்

மருதமுனை கடற்கரையில்   ஆண் சடலம் மீட்பு குடிபோதையில் கடலில் இறங்கியதாகக் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தகவல்

பாறுக் ஷிஹான்

மருதமுனை கடற்கரை ஓரத்தில் வெள்ளிக்கிழமை (09) மாலை 66 வயதுடைய ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகப் பெரியநீலாவணைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாண்டிருப்பு – 02, கிருஷ்ணா வீதியைச் சேர்ந்த ஆறுமுகம் கிருபாகரன்   என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:

குறித்த நபர் வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.40 மணியளவில் பாண்டிருப்பு – 02 விஷ்ணு கோவிலுக்கு அருகாமையிலுள்ள கடற்கரைப் பகுதிக்குக் குளிப்பதற்காகச் சென்றுள்ளார். இதன்போது எதிர்பாராதவிதமாக அவர் நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் பலனாக, சுமார் மாலை 5.20 மணியளவில் மருதமுனை கடற்கரைப் பகுதியில் அவரது சடலம் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டது.

குறித்த நபர் அதிகளவு குடிபோதையிலேயே கடலில் குளிப்பதற்காகச் சென்றுள்ளதாகவும், அதனாலேயே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பெரியநீலாவணைப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *