ஆலையடிவேம்பில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரிப்பு; கட்டுப்படுத்தப் பொதுமக்கள் கோரிக்கை!
(செல்வி வினாயகமூர்த்தி) அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்துவதற்கு பிரதேச சபையும் உரிய பொதுச் சுகாதார அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் கட்டாக்காலி நாய்கள் கூட்டமாகச் சுற்றித்திரிவதால்,பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டியிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாகப் பாடசாலைகளுக்குச் செல்லும் மற்றும் பாடசாலை முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள் கட்டாக்காலி நாய்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலை அதிகரித்து காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதனால், […]