பவதாகர்
கல்முனை வலயக்கல்விப்பணிமனையின் வாணி விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. பிரதிக்கல்விப்பணிப்பாளர் திருமதி வரணியா சாந்தரூபன் (திட்டமிடல்) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பூசை வழிபாடுகளுடன் மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகள் மிகவும் நேர்த்தியாக நடைபெற்றன.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பங்குபற்றிய வலயக்கல்விப்பணிப்பாளர் ஜனாப் எம.எஸ்.சஹீதுல் கல்விக்கு அதிபதியான கலைவாணியின் சிறப்புக்களை தனதுரையில் குறிப்பிட்டார். இதில் மேலும் அதிதிகளாக பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள், மாவட்ட பொறியியலாளர்கள் ,கணக்காளர், உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், நிருவாக உத்தியோகத்தர்கள் ,ஆசிரிய ஆலோசகர்கள் ,வளவாளர்கள் ,அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.























