October 25, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: Kethees

ADVRO முதியோர் இல்லத்துக்கு கிழக்கு மாகாண முதியோர் தின நிகழ்வில் பாராட்டும் பரிசும்!

கிழக்கு மாகாண் சமூகசேவை திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று  மாகாண மட்டத்திலான சர்வதேச முதியோர் தின விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த முதியோர் இல்லங்களுக்கான தெரிவில் மூன்றாவது இடத்தினை குருக்கள்மடத்தில் அமைந்துள்ள  ADVRO முதியோர் இல்லம் பெற்றுக் கொண்டது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் H.E.M,W.G திசநாயக மற்றும் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் திருமதி G.நவஜீவனா மற்றும் இல்லத்தின் தலைவர் சர்வார்ந்தன், முகாமையாளர் சந்திரலிங்கம் ஆகியோரையை சான்றிதழும் பரிசும் பெறும் , படத்தில் காணலாம்.

Read More

ஆலையடிவேம்பில் பேரிடர் தயார்நிலை வாரத்தை முன்னிட்டு வடிகான்கள் துப்பரவு செய்யும் பணி தீவிரம்!

– கிரிஷாந் மகாதேவன் – உள்ளூராட்சி மன்றங்களின் “பேரிடர் தயார்நிலை வாரம் – 2026” (ஒக்டோபர் 19 முதல் 23 வரை) நாடளாவிய ரீதியில் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், ஆலையடிவேம்பு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் தயார்நிலை நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் பருவமழைக் காலங்களில் ஏற்படக்கூடிய வெள்ள அனர்த்தங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பிரதேசத்தின் பிரதான வடிகால் அமைப்புகளைத் துப்பரவு செய்து நீரோட்டத்தைச் சீர்செய்யும் பணிகள் தினசரி அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. […]

Read More

திருக்கோவில் கருணாலயத்தில் சிறப்பாக நடைபெற்ற சீரடி சாய்பாபாவின் 108 வது மகா சமாதி தினம்!

( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் ஷீரடி சாயிபாபா கருணாலயத்தில்  சீரடி சாய்பாபாவின் 108 வது மகா சமாதி தினம் நேற்று( செவ்வாய்க்கிழமை)சிறப்பாக நடைபெற்றது. விசேட அபிஷேகம் ஆராதனை நடைபெற்றன.  15-10-2021 சீரடி சாயிபாபா ஸ்தூல உடலை விட்டு பிரிந்த நாள். 15-10-1918 மதியம் சரியாக 2: 35 மணியளவில் சாயிபாபா தமது ஸ்தூல உடலை விட்டு பிரிந்த நேரம்.  

Read More

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற விவாதப் போட்டி

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் இன்று விவாதப் போட்டி (21.10.2026) பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றன. அச்சுப்பிரதி நூல் வாசிப்பா இலத்திரனியில் ஊடக வாசிப்பா சிறந்தது எனும் தலைப்பில் பாடசாலைகள் கலந்து கொண்டனர். பிரதேச சபையின் தவிசாளர் திரு.ரூபசாந்தன் தலைமையுரை நிகழ்த்தி போட்டியை தொடங்கி வைத்தார். முதலில் கதிரவன் பட்டி-மன்ற அணியினர் நூல் வாசிப்பின் மகத்துவத்தை மையப்படுத்தி ஒரு பட்டிமன்ற சிறப்பு நிகழ்வை நடத்தினர். அதனை தொடர்ந்து விவாதப் போட்டிகள் நடைபெற்றன. […]

Read More

நாவிதன்வெளி பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டிற்கான பகிரங்கக் கேள்வி கோரல் அறிவித்தல்

பாறுக் ஷிஹான் நாவிதன்வெளிப் பிரதேச சபையின் நிருவாக எல்லைக்குட்பட்ட பொதுச் சந்தைகள், நடமாடும் சந்தைகள் மற்றும் இறைச்சிக் கடைகளை 01.01.2027 தொடக்கம் 31.12.2027 வரையான ஒரு வருட காலப்பகுதிக்குக் குத்தகைக்கு விடுவதற்காகத் தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து சீல் வைக்கப்பட்ட கேள்விகள்  கோரப்பட்டுள்ளன. குத்தகைக்கு விடப்படும் முக்கிய நிலையங்கள்:மாட்டிறைச்சிக் கடைகள்:12ஆம் கிராமம் மாட்டிறைச்சிக் கடைசொறிக்கல்முனை மாட்டிறைச்சிக் கடை (தௌஹீத் பள்ளி)சவளக்கடை மாட்டிறைச்சிக் கடை (பிலால் ஜும்ஆ பள்ளி)மத்திய முகாம் மாட்டிறைச்சிக் கடை (சந்தைப் பகுதி) பொதுச் சந்தைகள், நடமாடும் சந்தைகள் […]

Read More

மருதமுனை கடற்கரையில் சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்ற இறுதி அறிவித்தல்

–பாறுக் ஷிஹான்– 7 நாட்களுக்குள் அகற்றத் தவறின் நீதிமன்ற நடவடிக்கை மற்றும் திணைக்களத்தால் இடித்து அகற்றப்படும் என எச்சரிக்கை கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைகள் திணைக்களம்  உத்தரவு இலங்கையின் கடலோர வலய எல்லைக்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுமானங்களை அகற்றுவது தொடர்பில், கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைகள் திணைக்களத்தின் பிராந்திய பொறியியலாளரால் இறுதி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 1981 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக்க கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைகள் […]

Read More

இன்று கல்முனையில் நூலகம் மற்றும் அலுவலகம் திறப்பு விழா – அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் நிகழ்வு

(  வி.ரி.சகாதேவராஜா) கல்முனையில் அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனத்தின் (SCSDO) நூலகம் மற்றும் அலுவலகம் திறப்பு விழா அமெரிக்காவை தளமாகக்கொண்டு இயங்கும் திருக்கேதீஸ்வரன் குருசாமி அவர்களின் வழிகாட்டலில் நிறுவனத் தலைவி ஜெனிதா மோகன் தலைமையில் இன்று (21) புதன்கிழமை  நடைபெற்றது. சங்க உப தலைவர் ஓய்வுபெற்ற அதிபர் இ. இராசரெத்தினம் நாடா வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார். கல்முனை 1A, கல்முனை வடக்குப் பகுதியில் அமைந்துள்ள கிராம அபிவிருத்திச் சங்க பல்தேவை கட்டடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. “முயற்சியே […]

Read More

சம்மாந்துறையின் ஒரு அங்குல நிலத்தைக்கூட விட்டுக்கொடுக்கத் தயாரில்லை:வளத்தாப்பிட்டி, தில்லையடி எல்லைகளை உடனடியாக நிறுவுங்கள் – எஸ். நளீம்

தில்சாத் பர்வீஸ் சம்மாந்துறைப் பிரதேசத்தின் நிர்வாக மற்றும் காணி எல்லைகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுடன், வளத்தாப்பிட்டி மற்றும் தில்லையடி பகுதிகளின் எல்லைகளை உடனடியாக நிறுவுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ். நளீம் வலியுறுத்தியுள்ளார். “சம்மாந்துறையின் ஒரு அங்குல நிலத்தைக்கூட விட்டுக்கொடுக்கத் தயாரில்லை” என ஆவேசமாகத் தெரிவித்த அவர், பிரதேசத்தின் நில உரிமைகளையும் எல்லைகளையும் பாதுகாப்பதில் உரிய தரப்பினர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். சம்மாந்துறை பிரதேச […]

Read More

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “லீடர் அஷ்ரஃப் கிண்ணம்”

சாய்ந்தமருதில் “லீடர் அஷ்ரஃப் கிண்ணம்” கிரிக்கெட் சுற்றுப் போட்டி குறித்த விசேட ஆயத்தக் கலந்துரையாடல்!ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு!எம். பாமி மன்சூர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் நவம்பர் 10ஆம் திகதி நடாத்துவதற்குத் தீர்மானம்! பாறுக் ஷிஹான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “லீடர் அஷ்ரஃப் கிண்ணம்” மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் சாய்ந்தமருது பிராந்திய ஏற்பாடுகள் தொடர்பான விசேட […]

Read More

மண்டூர் நீர் வழங்கல் திட்டக் காரியாலயத்தில் வாணி விழா!

தில்சாத் பர்வீஸ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உட்பட்ட மண்டூர் நீர் வழங்கல் திட்டக் காரியாலயத்தில் இந்து சமயப் பாரம்பரியத்தின் அடிப்படையில் வாணி விழா (சரஸ்வதி பூஜை) இன்றையதினம் (20) மண்டூர் நீர் வழங்கல் திட்டக் காரியாலய பொறுப்பதிகாரி சிவபாலன் சிவஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. கல்வி, அறிவு, கலைகளை வழிபடும் தெய்வமான சரஸ்வதி தேவிக்கு பூஜைகள் செய்யப்பட்டதுடன், மண்டூர் நீர் வழங்கல் திட்டக் காரியாலயத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பிரார்த்தனையும் இடம்பெற்றது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் இவ்விழா மண்டூர் நீர் வழங்கல் […]

Read More