October 21, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > ஆலையடிவேம்பில் பேரிடர் தயார்நிலை வாரத்தை முன்னிட்டு வடிகான்கள் துப்பரவு செய்யும் பணி தீவிரம்!

ஆலையடிவேம்பில் பேரிடர் தயார்நிலை வாரத்தை முன்னிட்டு வடிகான்கள் துப்பரவு செய்யும் பணி தீவிரம்!

– கிரிஷாந் மகாதேவன் –

உள்ளூராட்சி மன்றங்களின் “பேரிடர் தயார்நிலை வாரம் – 2026” (ஒக்டோபர் 19 முதல் 23 வரை) நாடளாவிய ரீதியில் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், ஆலையடிவேம்பு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் தயார்நிலை நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் பருவமழைக் காலங்களில் ஏற்படக்கூடிய வெள்ள அனர்த்தங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பிரதேசத்தின் பிரதான வடிகால் அமைப்புகளைத் துப்பரவு செய்து நீரோட்டத்தைச் சீர்செய்யும் பணிகள் தினசரி அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் இன்றைய தினம் (21), அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வீதியிலுள்ள வடிகான்களைத் துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளர் ஏ. தர்மதாச தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதேச சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டு பணிகளை முன்னெடுத்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *