October 21, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற விவாதப் போட்டி

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற விவாதப் போட்டி

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் இன்று விவாதப் போட்டி (21.10.2026) பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றன. அச்சுப்பிரதி நூல் வாசிப்பா இலத்திரனியில் ஊடக வாசிப்பா சிறந்தது எனும் தலைப்பில் பாடசாலைகள் கலந்து கொண்டனர்.

பிரதேச சபையின் தவிசாளர் திரு.ரூபசாந்தன் தலைமையுரை நிகழ்த்தி போட்டியை தொடங்கி வைத்தார். முதலில் கதிரவன் பட்டி-மன்ற அணியினர் நூல் வாசிப்பின் மகத்துவத்தை மையப்படுத்தி ஒரு பட்டிமன்ற சிறப்பு நிகழ்வை நடத்தினர். அதனை தொடர்ந்து விவாதப் போட்டிகள் நடைபெற்றன. போட்டி நடுவர்களாக ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் கண.வரதராஜன்இ ஓய்வு பெற்ற கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஜெ. டேவிட்இ ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் கே. சாந்தகுமார் என்போர் பணியாற்றி காய்தல் உவத்தலின்றி நடுநிலையான தீர்ப்புகளை வழங்கினர்.

தவிசாளர் திரு.ரூபசாந்தன் மற்றும் பிரதி தவிசாயர் புவனரூபன் , பிரதேச சபை பணிக்குழாம் மிகவும் அர்ப்பணிப்போடு இப்போட்டிகளை நடத்தி வருவதையிட்டும்இ வாசிப்பு மாத நிகழ்வுகளையிட்டும் பலரும் பாராட்டி வருகின்றனர். எதிர் வரும் 29ஆம் திகதி மாபெரும் இறுதி நிகழ்வை நடத்தி பரிசில்கள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கல்முனை நெற் ஊடக வலையமைப்பு ஒரு தொகுதி நூல்களையும் தவிசாளரிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *