November 2, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > திருக்கோவிலில் ஷேக்ஸ்பியரின் ‘ஒதெல்லோ’ கவிதை நாடகம் அரங்கேற்றம்!

திருக்கோவிலில் ஷேக்ஸ்பியரின் ‘ஒதெல்லோ’ கவிதை நாடகம் அரங்கேற்றம்!

J.K.ஜதுர்ஷன்

மாகாண மட்ட ஆங்கில மொழி தினப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற நாடகம் மேடையேற்றம்

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் மகாவித்தியாலயத்தின் பாடசாலையின் ஆங்கிலப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட உலகப் புகழ்பெற்ற ஆங்கில இலக்கியப் படைப்பான வில்லியம் ஷேக்ஸ்பியரின் ‘ஒதெல்லோ’ (OTHELLO) கவிதை நாடகம் நேற்று (30) பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் சிறப்பாக அரங்கேற்றப்பட்டது.

பாடசாலை அதிபர் திருமதி G.K. தட்சணாமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. R. உதயகுமார் கலந்து சிறப்பித்தார்.

மாகாண மட்ட ஆங்கில மொழி தினப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற இந்நாடகம், மாணவர்களின் ஆங்கில மொழித் திறன், நாடக ஆற்றல், படைப்பாற்றல் மற்றும் கலைத்திறன்களை வெளிப்படுத்தும் நோக்கில் மீண்டும் மேடையேற்றப்பட்டது.

இந்நிகழ்வில் ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நாடகத்தைப் பார்வையிட்டனர்.

இதன்போது, நாடகத்தின் தயாரிப்பு மற்றும் அரங்கேற்றப் பணிகளில் பங்களிப்புச் செய்த மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் மாகாண மட்ட ஆங்கில மொழி தினப் போட்டிகளில் பங்குபற்றி தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவான மாணவர்களுக்கும் பதக்கங்கள் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

மாணவர்களின் ஆங்கில மொழி ஆற்றலையும் கலைத்திறன்களையும் ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு, பாடசாலை சமூகத்தின் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றது.

முழுமையான புகைப்படங்களையும் பார்வையிட இந்த இணைப்பை அழுத்தவும் https://www.facebook.com/share/p/14t3L8mAxoZ/

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *