November 2, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு கண்ணகிகிராமத்தில் சிரமதானம்.

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு கண்ணகிகிராமத்தில் சிரமதானம்.

(செல்வி வினாயகமூர்த்தி)

அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா (Clean Sri Lanka) தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கண்ணகிகிராமம் 1 மற்றும் 2 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இன்று (31) சனிக்கிழமை சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.


பொதுமக்களின் பங்கேற்புடன், ஆலையடிவேம்பு பிரதேச செயலகம், அதிரடிப்படையினர் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இச்சிரமதானப் பணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, கண்ணகிகிராமம் 2 பகுதியில் அமைந்துள்ள பிரதான கால்வாய் சுத்தம் செய்யப்பட்டதுடன், சுற்றுச்சூழலைத் தூய்மைப்படுத்தும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.
கண்ணகிகிராமம் பிள்ளையார் கோவில் அருகில் ஒன்றுகூடிய பொதுமக்கள் மற்றும் ஏனைய பங்கேற்பாளர்கள் ஆர்வத்துடன் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டனர்.
சுற்றுச்சூழல் தூய்மையைப் பேணுதல், பொதுமக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

“நமது கைகள் இணைந்தால் நமது ஊரின் நாளைய தினத்தை அழகாக்கலாம்” என்ற தொனிப்பொருளில் இச்சிரமதானப் பணி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *