November 2, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 24 மணி நேர CT ஸ்கேன் சேவை

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 24 மணி நேர CT ஸ்கேன் சேவை

(வி.ரி.சகாதேவராஜா)

அம்பாறை மாவட்டம், கல்முனை  ஆதார வைத்தியசாலையில் (BHKN) 24 மணி நேர CT ஸ்கேன் சேவை தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.

கிழக்கு மாகாணம் முழுவதும் உள்ள நோயாளர்களுக்கு விரைவான நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை தீர்மானங்களை மேற்கொள்வதற்காக இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள பல வைத்தியசாலைகளைச் சேர்ந்த நோயாளர்கள் பயனடைந்து வருகின்றனர்.

பயனடையும் வைத்தியசாலைகளாக அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை, நிந்தவூர், சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பொத்துவில் மற்றும் திருக்கோவில் ஆகிய வைத்தியசாலைகள் பலன் பெறுகின்றன.மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி மற்றும் வாழைச்சேனை வைத்தியசாலைகள் பெறுகின்றன.

மாதாந்த சேவையாக மாதம் தோறும் சுமார் 550 முதல் 600 வரையான நோயாளர்களுக்கு CT ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

24 மணி நேரமும் சேவை கிடைப்பதால், அவசர சிகிச்சைப் பிரிவு நோயாளர்களுக்கு உடனடியாக பரிசோதனை செய்து, விரைவாக சிகிச்சை அளிக்க முடிகிறது.

தரமான, பாதுகாப்பான, அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய சுகாதார சேவையை வழங்குவதில் கல்முனை  ஆதார வைத்தியசாலை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *