கமு/ பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் உலக சிறுவர் தின விழா இன்றைய தினம் (அக்டோபர் 01) மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
பாடசாலையின் பிரதி அதிபர் திரு. M.S.முசாபிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கனடா ‘உதவும் பொற்கரங்கள்’ அமைப்பின் இணைப்பாளரும் கல்முனை நெற் ஊடகவியலாளருமான திரு. என். சௌவியதாசன் அவர்கள் கௌரவ அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
மேலும் அக்ரோ மொமெண்டும் தனியார் கம்பனி முகாமையாளர் திரு.K. மேனன்,இந்து கலாசார திணைக்கள வளவாளர் செல்வன் சனாதனன்,உதவி அதிபர் திரு பி.பற்குணராஜா மருதமுனை டில்மானி பேக்கரி உரிமையாளர் A.A பாறுக் ஆகியோரும் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
விழாவின் போது மாணவர்களின் கலை, கலாச்சார திறமைகளை வெளிப்படுத்தும் பல்வேறு வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்று அனைவரையும் கவர்ந்தன.
மேலும், கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9 ‘A’ சித்திகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவன் இ. ஜோயல் கனடா ‘உதவும் பொற்கரங்கள்’ அமைப்பின் பணிப்பாளர்,சமூகசேவகர் திரு. விசு கணபதிப்பிள்ளையின் நிதியுதவியில் கல்வி ஊக்குவிப்பு உதவித் திட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் எனப் பலரும் கலந்து கொண்டு சிறுவர் தின வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.









