கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் முன்னாள் தலைவரான அருள்ஞானமூர்த்தி டிலான்சனின் (டிலு) இறுதி நல்லடக்கம் இன்று பெருமளவான இளைஞர்கள் பொதுமகக்ளின் கண்ணீரஞ்சலியுடன் நற்பிட்டிமுனை இந்து மயானத்தில் இடம் பெற்றது
இளைஞர் சேனையின் கொடி போர்த்தப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது
நேற்று சுகயீனம் காரணமாக இறையடிசேர்ந்த டிலான்சன் கல்முனையில் அனைவராலும் நன்கு அறியப்பட்ட சமூகப்பற்றாளராக செயற்பட்டவர். இவர் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் அருள்ஞானமூர்த்தி ஓய்வுபெற்ற அதிபர் ஜெனைதாஆசிரியர் ஆகியோரின் மூத்த புதல்வரும் சட்டத்தரணியும் தமிழரசுக்கட்சியின் கல்முனை தொகுதி தலைவருமான நிதான்சனின் சகோதரும் ஆவார். இவர் நற்பிட்டிமுனையில் திருமணம் முடித்துள்ளார் ஒரு பெண்பிள்ளைக்கு தந்தையுமாவர். மிக இள வயதில் இவரது இழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
