September 30, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை), சர்வதேச விஞ்ஞான ஆக்கப்போட்டியில் சாதனை

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை), சர்வதேச விஞ்ஞான ஆக்கப்போட்டியில் சாதனை

-சிவகுமார்-

மட்டக்களப்பு – பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை), சர்வதேச அளவில் நடைபெற்ற விஞ்ஞான ஆக்கப்போட்டியில் சிறப்பான சாதனையைப் பதிவு செய்து மட்டக்களப்பு மண்ணுக்கும் இலங்கைக்கும் பெருமை சேர்த்துள்ளது.

சீனாவின் நனிங் பிரதேசத்தில் சர்வதேச ரீதியில் நடைபெற்ற விஞ்ஞான ஆக்கப்போட்டியில் பங்கேற்ற இலங்கை அணி இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

இப்போட்டிக்கான இலங்கை அணிக்கு தலைமை தாங்கிச் சென்ற பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தின் இரசாயனவியல் ஆசிரியர் எஸ். தேவகுமார் அவர்களின் வழிகாட்டுதலும் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.

அத்துடன், போட்டியில் பங்கேற்று தமது திறமையை சர்வதேச அரங்கில் வெளிப்படுத்திய மாணவர்களும் இச்சாதனையின் முக்கிய பங்காளிகளாக திகழ்கின்றனர்.

மாணவர்களின் திறமைகளை இனங்கண்டு, அவர்களுக்கு தொடர்ச்சியான வழிகாட்டலையும் ஊக்கத்தையும் வழங்கி வரும் பாடசாலை முதல்வர் எம். சபேஸ்குமார் (SLEAS) அவர்களுக்கும், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சர்வதேச விஞ்ஞான ஆக்கப்போட்டியில் இலங்கை அணியை இரண்டாம் இடத்திற்கு கொண்டு சென்ற பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய ஆசிரியர் மற்றும் மாணவர்களின் இந்தச் சாதனை, கிழக்கு மாகாணத்தின் கல்வித் துறைக்கு மட்டுமன்றி இலங்கையின் பாடசாலை மாணவர்களின் அறிவியல் திறனுக்கும் கிடைத்துள்ள முக்கியமான அங்கீகாரமாக அமைந்துள்ளது.

இந்த வரலாற்றுச் சாதனையைப் பெற்ற மாணவர்கள், ஆசிரியர் எஸ். தேவகுமார், பாடசாலை முதல்வர் எம். சபேஸ்குமார் (SLEAS) மற்றும் முழுமையான பாடசாலை சமூகத்தினருக்கு எமது மனமார்ந்த பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *