September 30, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > ​வளத்தாப்பிட்டி வில்லுக்குளம் Boys அமைப்பின் “திறமைக்கு மகுடம்” நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது!

​வளத்தாப்பிட்டி வில்லுக்குளம் Boys அமைப்பின் “திறமைக்கு மகுடம்” நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது!


​
வளத்தாப்பிட்டி வில்லுக்குளம் Boys அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட “திறமைக்கு மகுடம்” சிறப்பு நிகழ்வு 28.09.2026 நேற்று மிகவும் கோலாகலமாக பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.


​இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.


​மேலும், சிறப்பு விருந்தினர்களாக பாடசாலையின் அதிபர் திரு. தர்சநாத், முன்னாள் அதிபர்களான திரு. கோணேசமூர்த்தி, திரு. கமலநாதன், சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர் திரு. ஜெயச்சந்திரன், நிந்தவூர் இலங்கை வங்கியின் முகாமையாளர் திரு. ரஜனிக்காந் வளத்தாப்பிட்டி கிராம சேவகர் திரு உதயராஜன். ஆகியோருடன் ஆலய நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் ஏராளமான நலன்விரும்பிகளும் கலந்துகொண்டனர்.


​இந்நிகழ்வின் போது மாணவர்களின் கலை, கல்வி மற்றும் ஆற்றல்களைக் கௌரவிக்கும் வகையில் புலமைப்பரிசில் பரீட்சையில் மற்றும் கல்வியல்கல்லூரி தாதியர்கல்லூரி பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கப்பட்டதோடு கவிஞர் காரையன் கதனும் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இக்கிராம மக்கள் 1990 இல் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த நிலையில் இன்று பெயர்சொல்லும் அளவில் கல்வியாலும் பொருளாதாரத்திலும் முன்னேறி வருவது வாழ்த்துதற்குரியது எனவும், உலகில் யூதர்கள் பல்வேறு சந்தர்ப்பத்தில் பிரித்து ஆளப்பட்ட போதும் இன்று உலகின் முன்னிலையாக வளச்சியடைந்து காணப்படுவது போன்று கல்வியால் நம் சமூகம் முன்னிலை வகிக்க வேண்டும் என்றதோடு பாடசாலையின் அதிபரின் வேண்டுகோளுக்கினங்க வேண்ட் வாத்திய கருவிகளை விரைவாக பெற்று தருவதாக கூறினார்.

இந்நிகழ்வில் பிரதேசத்தின் முக்கிய பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.வில்லுக்குளம் வோய்ஸ்சின் திறமைக்கு மகுடம் 2026…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *