September 30, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > உலக சுற்றுலா தினத்தில் உல்லையில் காட்டு யானை தாக்கி வெளிநாட்டு சுற்றுலாப் பயணி படுகாயம்.!

உலக சுற்றுலா தினத்தில் உல்லையில் காட்டு யானை தாக்கி வெளிநாட்டு சுற்றுலாப் பயணி படுகாயம்.!

( வி.ரி. சகாதேவராஜா)

 உலக சுற்றுலா தின காலத்தில், பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அறுகம்பை உல்லை சின்ன உல்லைப்  பகுதியில் இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த சுற்றுலாப் பயணி உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காகப் பொத்துவில் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அண்மைக்காலமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அறுகம்பை உல்லாசபுரியில் அதிகமாகி வருகிறது.

சுற்றுலாப் பயணிகள் அதிகம் நடமாடும் இப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளமை அப்பகுதி மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் கவனம் எடுப்பார்களா?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *