September 30, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > கல்முனையின் சமூகப் பணியாளர் அ. டிலான்ஷன் – மு. ராஜேஸ்வரன் , சந்திரசேகரம் ராஜன் இரங்கல் செய்தி

கல்முனையின் சமூகப் பணியாளர் அ. டிலான்ஷன் – மு. ராஜேஸ்வரன் , சந்திரசேகரம் ராஜன் இரங்கல் செய்தி

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மு. ராஜேஸ்வரன் அனுதாபம்

கல்முனையின் சமூகப் பணியாளர் அ. டிலான்ஷன் காலமானார் – மு. ராஜேஸ்வரன் அனுதாபம்
கல்முனை தமிழ் இளைஞர் சேனையின் முன்னாள் தலைவரும், இனப்பற்றும் சமூக அக்கறையும் கொண்டவருமான அ. டிலான்ஷன் காலமானார். அவரது மறைவு கல்முனை மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்முனையில் எங்கு என்ன பிரச்சினை ஏற்பட்டாலும், அந்த இடத்துக்கு விரைந்து சென்று, தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து மக்களுடன் துணைநின்றவர் டிலான்ஷன் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு. ராஜேஸ்வரன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும், இனப்பற்றுடன் சமூகப் பணிகளில் ஈடுபட்ட அவர், அனைவரிடமும் சிரித்த முகத்துடன் அன்பாகவும் பண்பாகவும் பழகும் தன்மை கொண்டவர் என்றும், அவரது சமூகப் பங்களிப்பும் மனிதநேயமும் என்றும் நினைவுகூரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிலான்ஷனின் மறைவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமன்றி, அவருடன் பழகிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் கல்முனை சமூகத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மு. ராஜேஸ்வரன், அன்னாரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

!
கல்முனைப்பிராந்திய பிரபல சமூக செயற்பாட்டாளரும் வைத்தியசாலைக்குழுத் தலைவரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான சந்திரசேகரம் ராஜன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்..

கல்முனை பிராந்தியத்திலே தமிழினத்திற்காக குரல் கொடுத்த ஒரு உன்னதமான தலைவன்.தமிழ் மக்கள் கல்முனையிலே ஏதேனும் பிரச்சினைகளில் சிக்கினால் அந்த பிரச்சினைகள் சம்பந்தமாக தனது உயிரை கூட மதிப்பிடாமல் அந்தப் பிரச்சனைக்கு தானாகவே வந்து முகம் கொடுத்து எங்கள் இனத்துக்காக எங்கள் சமூகத்திற்காக முன்னெடுக்கின்ற அத்தனை செயற்பாடுகளுக்கும் முன்னிற்பார்.

அன்புத் தம்பி டிலு அவர்கள் திடீர் மரணம் அடைந்த செய்தி கேட்டு மனம் வருந்தினேன். இருந்த போதும் ஆண்டவனின் கட்டளை எப்போது யார் செல்வார் என்பது தெரியாது.
அந்த வகையிலே அவர் இறைவனடி சேர்ந்திருக்கின்றார்.

அவரது ஆத்மா சாந்தியடைய எமது வைத்தியசாலை குழு சார்பாக அவருக்கு என்னுடைய இறுதி அஞ்சலியை செலுத்திக் கொள்கின்றேன்.
அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
என்றார்.

அவரது ஈமக் கிரியைகள் இன்று(29) செவ்வாய் மாலை 4 மணிக்கு நற்பிட்டிமுனை மயானத்தில் நடைபெறும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *