September 23, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > அனோஜனின் விடுதலைக்காக காரைதீவில் இறைமன்றாட்டம்!

அனோஜனின் விடுதலைக்காக காரைதீவில் இறைமன்றாட்டம்!

(வி.ரி.சகாதேவராஜா)

சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சிவராசா அனோஜனின் விடுதலையை வலியுறுத்தியும், அவருக்காக இறைமன்றாட்டம் மேற்கொள்ளும் வகையிலும்  பிரார்த்தனை செய்யும் நிகழ்வொன்று காரைதீவு கண்ணகி அம்மன் ஆலய முன்றலில், இன்று (22) செவ்வாய்க்கிழமை மாலை உணர்வு பூர்வமாக நடைபெற்றது.

2001 ஆம் ஆண்டு சாதாரண தரப் பிரிவு மற்றும் 2004 ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவு (JALU) கழக நண்பர்கள் ஒன்றிணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.

இதன்போது மக்கள் பிரதிநிதிகள் ஆலய பிரமுகர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், நண்பர்கள், ஊடகவியலாளர்கள், உறவினர்கள்  பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஒன்றுகூடி, அனோஜனின் விடுதலைக்காக இரண்டு நிமிடம் இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்தனர்.

அவருக்கு ஆதரவாக ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை அங்கு பலரும் வலியுறுத்தி உரையாற்றினர்.

இறுதியில் அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து வேட்டையும் இடம்பெற்றது.பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடி பதாதைகளுடன் கலந்து கொண்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *