September 23, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தள பதிவுகள் தொடர்பில் வழக்கு – அர்ச்சுனா எம்.பி. உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தள பதிவுகள் தொடர்பில் வழக்கு – அர்ச்சுனா எம்.பி. உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக

கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டதாகக் கூறப்படும் கருத்துக்கள் தொடர்பில், நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஹிஜாப் தொடர்பான சர்ச்சையை அடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் பதிவுகள் தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியர் சுகுணன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.

இந்த வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராகவும், தொடர்புடைய சமூக வலைத்தளப் பதிவுகள் மற்றும் காணொளிகள் தொடர்பாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பு நீதிமன்றத்தில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வைத்தியர் சுகுணன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார்.

இதன்போது, குறித்த விவகாரத்தில் நிபந்தனைக்குட்பட்ட கட்டளை ஒன்றைப் பிறப்பிப்பதா என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக வைத்தியர் சுகுணன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *