உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டு வருகிறது.
சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட எட்டு தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டவர்களுக்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்தமை தொடர்பில், நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக மொத்தம் 23,270 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இவர்களில் 15 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய 9 பிரதிவாதிகளும் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேல் நீதிமன்ற நீதிபதி (தலைவர்) நவரத்ன மாரசிங்க, நீதிபதிகள் சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் இராமநாதன் கண்ணன் ஆகியோர் அடங்கிய கொழும்பு மேல் நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டு வருகிறது.
தீர்ப்பின் தமிழ் மொழிபெயர்ப்பும் உயர் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரால் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டு வருகின்றது.