September 30, 2026

Blog Post

Kalmunai Net > 2026 > September

கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தரத்திற்கு பதவி உயர்வு!

செல்லையா பேரின்பராசா கல்முனை கல்வி வலயத்தில் திட்டமிடலுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றும் திருமதி வரணியா சாந்தரூபன் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தரத்திற்கு 16.06.2026 திகதி முதல் செயற்படும் வகையில்பதவி உயர்வு பெற்றுள்ளார். கணித பாட பட்டதாரி ஆசிரியராக 29.01.2014 ஆந் திகதி கல்விப் புலத்தில் நுழைந்து திருக்கோவில் கல்வி வலயத்திலுள்ள ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்தில் பணியாற்றி வந்த இவர் 16.06.2014 ஆந் திகதி இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சையில் சித்தியடைந்து […]

Read More

கல்முனை தூய அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் 47ஆவது வருடாந்த திருவிழா!

கல்முனை தூய அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் 47ஆவது வருடாந்த திருவிழா நேற்று (25) மாலை கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பமாகியது. “நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்” (யோசுவா 24:15) என்ற இறைவார்த்தையை அடிப்படையாகக் கொண்டு இவ்வருட திருவிழா நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. திருவிழா கூட்டுத்திருப்பலி எதிர்வரும் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.15 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. கார்மேல் பற்றிமா கல்லூரி, தேசிய பாடசாலை, கல்முனையின் அதிபர் அருட்பணி. J. லெபோன் சுதன் (OMI) அடிகளாரின் தலைமையில் திருவிழா […]

Read More

பெரியநீலாவணை விஸ்ணு மகா வித்தியாலய ஆசிரியர் தின நிகழ்வுக்கு உதவும் பொற்கரங்கள் அன்பளிப்பு

பெரியநீலாவணை கமு/விஸ்ணு மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ள ஆசிரியர் தின நிகழ்வை சிறப்பாக முன்னெடுப்பதற்காக சமூகசேவகர் விசு கணபதிப்பிள்ளையின் , “உதவும் பொற்கரங்கள் அமைப்பு – கனடா”வினால் உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்ப்பணிக்காகவும், சமூக சேவைக்காகவும் செயற்பட்டு வரும் உதவும் பொற்கரங்கள் அமைப்பு – கனடா, கல்வி மற்றும் பாடசாலை சமூகத்தின் தேவைகளுக்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வருகின்றது. அந்த வகையில், பெரியநீலாவணை கமு/விஸ்ணு மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ள ஆசிரியர் தின நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்வதற்குத் […]

Read More

சம்மாந்துறையில் இந்தியப் பிரஜைகளின் பல இலட்சம் ரூபாய் பணம் திருட்டு: இரு பெண்கள் கைது

நீதிமன்ற வளாக சிசிடிவி காட்சிகள் மூலம் பொலிஸார் தீவிர விசாரணை (பாறுக் ஷிஹான்)  சம்மாந்துறை நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக வருகை தந்த இந்தியப் பிரஜைகள் தவறவிட்ட சுமார் 31 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கை ரூபாய் பெறுமதியுடைய அமெரிக்க டொலர்களை   திருடிய குற்றச்சாட்டின் பேரில்  இரு பெண்கள் சம்மாந்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கு ஒன்றிற்காக இந்தியா – தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர்   வியாழக்கிழமை […]

Read More

கர்ப்பிணித் தாய்மாருக்கு சத்துள்ள உணவு வழங்கி ஊக்குவிப்பு!

( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு பிரதேச கர்ப்பிணி தாய்மாருக்கு சத்துள்ள உணவு உட்கொள்ள ஊக்குவிக்கும் செயற்பாடு, காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் கிரமமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பிரதேச வைத்திய சாலையின் பொறுப்பதிகாரி மாவட்ட வைத்திய அதிகாரி மருத்துவர் அஜந்தா  சுரேஷ் தலைமையில் இன்று (25) வெள்ளிக்கிழமையும் அவர்களுக்கான அந்த விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் போது சுவாட்  நிறுவனத்தினரால் கர்ப்பிணித்தாய்மாருக்கான சத்துள்ள வடை வழங்கப்பட்டது. ANC clinic உடன் தொடர்புடையதாக நடைபெறும் சத்துணவு தொடர்பான அறிவூட்டல் கருத்தரங்கின்போது தொடர்ச்சியாக எமது […]

Read More

ஐ.நா. பொதுச்சபை கூட்டம் 28ஆம் திகதி; உரையாற்றவுள்ள விஜித ஹேரத்; அனோஜனின் விடயம் தொடர்பாவும் சவூதி பிரதிநிதிகளுடன் நேரில் பேசுவார்

இலங்கையின் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் (UNGA) 81ஆவது கூட்டத்தொடரின் பொது விவாதத்தில் எதிர்வரும் செப்டம்பர் 28ஆம் திகதி நியூயோர்க்கில் உரையாற்றவுள்ளார். சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் மரண தண்டனையில் இருந்து மன்னிப்பபு வழங்கும் கோரிக்கை தொடர்பிலும், ஐ.நா விஜயத்தின்போது இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவரும் இராஜதந்திர நகர்வு தொடர்பிலும் வருகைதரும் சவூதி அரபிய பிரதிநிதிகளுடன் நேரிலும் பேசவுள்ளதாகவும் அமைச்சர் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார் இதன்போது சர்வதேச […]

Read More

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல்

நூருல் ஹுதா உமர் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் மருத்துவ சேவைகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (24) பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள சுகாதார அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான வைத்திய கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், சமூக வலுவூட்டல், சமூக பாதுகாப்பு மற்றும் கிராமிய அபிவிருத்தி பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அரசியலமைப்புப் […]

Read More

அனோஜன் விவகாரத்தில் அரசியல்வாதிகள் நிதானமாகச் செயற்பட வேண்டும்-உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் வலியுறுத்தல்- இனமுரண்பாடுகளைத் தூண்டும் பேச்சுகளைத் தவிர்த்து கருணை மனு மூலமே தீர்வு காண முடியும் என அறிவிப்பு

(பாறுக் ஷிஹான் ) சவூதி அரேபியாவில் தண்டனை விவகாரத்தை எதிர்கொண்டு வரும் சிவராசா அனோஜன் விடயத்தில், இலங்கையின் அரசியல்வாதிகள் எதைப் பேசுவது, எதைப் பேசக்கூடாது என்பதில் தவறி வருவதாக உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் சாடியுள்ளார். அனோஜன் விவகாரம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: “இவ்விவகாரத்தில் சிவஸ்ரீ சிறிதரன் எம்பி பேசிய வார்த்தைகள் மிகவும் பாரதூரமானவை. அவர் ஒரு நாட்டின் சட்ட திட்டங்களைத் […]

Read More

கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வரணியாவும், றியாசாவும் SLEAS-1 தரத்திற்கு தரமுயர்வு

நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களாகக் கடமையாற்றி வரும் என். வரணியா சாந்தரூபன் மற்றும் எம்.எச். றியாஸா ஆகியோர் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தரத்திற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளனர். கல்வி நிர்வாகத் துறையில் தமது திறமை, அனுபவம், அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த நிர்வாகத் திறனை வெளிப்படுத்தி வரும் இருவருக்கும் கிடைத்துள்ள இத்தரமுயர்வு, அவர்களின் நீண்டகால சேவைக்குக் கிடைத்துள்ள முக்கியமான அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. கல்முனை கல்வி வலயத்தின் கல்வி நிர்வாக நடவடிக்கைகளை திறம்பட […]

Read More

நேற்று பாண்டிருப்பில் பக்தி பூர்வமாக இடம்பெற்ற வனவாசம்;சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்பு 

படங்கள் – (வி.ரி.சகாதேவராஜா- Sanjeevanviews) வரலாற்று பிரசித்தி பெற்ற கல்முனை பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீப்பள்ளய உற்சவத்தின் வனவாசம் நிகழ்வு நேற்று  (23) புதன்கிழமை மாலை பக்திபூர்வமாக நடைபெற்றது.  சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்ற இந்த நிகழ்வில் சுமார் 15 கிலோமீட்டர் தூரம் குளக்கட்டு வயல் பிரதேசம் எல்லாம் நடந்து இந்த வனவாசத்தை நிறைவு செய்வது பக்தர்களின் வழக்கமான செயற்பாடாகும். ஆலயத்தில் விசேட பூஜையுடன் பஞ்ச பாண்டவர்கள் ஐவர் சகிதம் பிற்பகல் 3.30 […]

Read More