பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் இன்று (26) சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
வைத்தியசாலையின் சமையலறையில் எரிவாயு சிலின்டர் வெடிப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் வைத்தியசாலைக் கட்டடத்திற்குப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த வைத்தியசாலை ஊழியர்கள் சிகிச்சைக்காகப் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.