செல்லையா பேரின்பராசா
கல்முனை கல்வி வலயத்தில் திட்டமிடலுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றும் திருமதி வரணியா சாந்தரூபன் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தரத்திற்கு 16.06.2026 திகதி முதல் செயற்படும் வகையில்பதவி உயர்வு பெற்றுள்ளார்.
கணித பாட பட்டதாரி ஆசிரியராக 29.01.2014 ஆந் திகதி கல்விப் புலத்தில் நுழைந்து திருக்கோவில் கல்வி வலயத்திலுள்ள ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்தில் பணியாற்றி வந்த இவர் 16.06.2014 ஆந் திகதி இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சையில் சித்தியடைந்து திருக்கோவில் கல்வி வலயத்தில் 16.06.2014ஆந் திகதி தொடக்கம் 28.02.2022 ஆந் திகதிவரை பணியாற்றி 29.02.2022 ஆந் திகதி தொடக்கம் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் திட்டமிடலுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றி வருகின்றார்.
கணித விஞ்ஞான பட்டதாரியான இவர் கல்வி முதுமானி பட்டதாரிகவும் , பட்டப்பின் கல்வி டிப்ளோமா , பட்டப்பின் கல்வி நிர்வாக டிப்ளோமாவை பெற்று கல்வித் தகைமையையும் தொழில் தகைமையும் உயர்த்திக் கொண்ட சிறந்த கல்வி நிர்வாக அதிகாரியாவார்.
இவர் காரைதீவில் இருந்து இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு மிகவும் இளவயதில் தெரிவானவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.