September 30, 2026

Blog Post

Kalmunai Net > 2026 > September

மற்றுமொரு இலஞ்சக் குற்றச்சாட்டு: சிறைச்சாலையில் நாமல் ராஜபக்ஷவிடம் விசாரணை

டிரான்ஸ்வொர்க் சதுக்க நில விவகாரம்: நாமல் ராஜபக்ஷவிடம் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு கொழும்பு கோட்டை டிரான்ஸ்வொர்க் சதுக்க நிலத்தை விரைவாகப் பெற்றுக்கொடுக்க உதவுவதற்காக, கிரிஷ் (Krrish) தனியார் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவிடமிருந்து மூன்று சந்தர்ப்பங்களில் 70 மில்லியன் ரூபாய் (700 இலட்சம்) லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. கொழும்பு பிரதம நீதவான் அசங்க […]

Read More

அக்கரைப்பற்று பனங்காடு அருள்மிகு ஸ்ரீ நாககாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ திருவிழா – 2026

( அ . யனுஷ்பிரஜன் ) பனங்காடு தன்னில் வயல் வளமும் நீர் வளமும் நிறைந்த தில்லையாற்று அருகே சிவபூமி மண்ணில் பலகலையாக வடிவெடுத்து கோவில் கொண்டு பல ஊர் மக்களும் நோய் தீர்த்து மக்களுக்கு அருள் பாலிக்கும் ஸ்ரீ நாககாளி அம்மனுக்கு 2026.09.26ம் திகதி சனிக்கிழமை பக்தர்கள் மஞ்சள் குளித்து தீமிதிப்பு நிகழ்வு இடம்பெற்று அம்மன் திருக்குளிர்த்தி இடம்பெற்றது அதனைத் தொடர்ந்து திருப்பொற்சுண்ணம் இடிக்கப்பட்டு தில்லையாற்றில் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது பக்தர்கள் கலந்து கொண்டு அன்னை நாககாளி […]

Read More

கல்முனை, அக்கறைப்பற்று மாநகர சபைகளுக்கு கொழும்பு மாநகர சபையினால் தீயணைப்பாளர்களுக்கான அங்கிகள், பாதுகாப்பு உபகரணங்கள் அன்பளிப்பு.!

(அஸ்லம் எஸ். மெளலானா) கல்முனை மாநகர சபை மற்றும் அக்கறைப்பற்று மாநகர சபை ஆகியவற்றுக்கு கொழும்பு மாநகர சபையினால் தீயணைப்பு வீரர்களுக்குரிய பெறுமதியான தீயணைப்பு அங்கிகள் மற்றும் ஒரு தொகுதி தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு மாநகர சபையில் கொழும்பு மாநகர மேயர் விராய் கெலி பஸ்தசார், கல்முனை மாநகர சபையினதும் அக்கறைப்பற்று மாநகர சபையினதும் ஆணையாளர் என்.எம். நௌபீஸ் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. கல்முனை மாநகர சபை மற்றும் […]

Read More

கோளாவில் விநாயகர் மகா வித்தியாலய மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிவு; சாதனை மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு.

(செல்வி வினாயகமூர்த்தி) 2026ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய கோளாவில் விநாயகர் மகா வித்தியாலய மாணவர்கள் தேசிய மட்டப் போட்டிகளுக்கு தெரிவாகி பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். 18 வயதிற்குட்பட்டோர் பிரிவில் எஸ். கீர்த்திகா 3000 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதலாம் இடத்தையும், 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார்.20 வயதிற்குட்பட்டோர் பிரிவில் என். தருகா 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று தேசிய […]

Read More

சாய்ந்தமருது முதல் நிந்தவூர் வரையிலான கடற்கரையோரங்களில் சட்டவிரோத கடல்மண் கடத்தல் தீவிர அதிகரிப்பு:

கடற்கரைகளில் சட்டவிரோத கடல்மண் கடத்தல் தீவிர அதிகரிப்பு: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை! (பாறுக் ஷஹான்)அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது முதல் நிந்தவூர் வரையிலான கடற்கரையோரங்களில் அண்மைக்காலமாகச் சட்டவிரோதமான முறையில் உரப்பைகளில் அடைக்கப்பட்டு, மோட்டார் சைக்கிள்கள் மூலம் கடல்மண் கடத்தப்படும் சம்பவங்கள் வெகுவாக அதிகரித்து வருகின்றன. அதிகாலை வேளை முதல் நள்ளிரவு வரை தொடர்ச்சியாக இச் சட்டவிரோத மண் கடத்தல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அப்பகுதிச் செய்தியாளர் பாறுக் ஷஹான் தெரிவிக்கின்றார். சோதனைகள் நிறுத்தப்பட்டதால் மேலெழும் கடத்தல்ஆரம்ப […]

Read More

காரைதீவு ராஜ்மோகனின் 43வது படைப்பான சுவாமி விபுலானந்தர் புகழ் பாடல்  வெளியீடு!

( வி.ரி.சகாதேவராஜா) உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் தமிழின் தவப்புதல்வர் சுவாமி விபுலானந்தரின் வாழ்வும் தத்துவமும் போற்றும் புகழ் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. காரைதீவின் பிரபல பாடலாசிரியரும், எழுத்தாளருமான இரா. ராஜ்மோகனின் 43வது பாடலாக இந்த புகழ் பாடல் சுய ஆக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. Asiians Records நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்த பாடலுக்கு, பாடல் வரிகளை யாத்து பாடியவர் காரைதீவு இரா. இராஜ்மோகன் ஆவார். இசையை  விநாயகமூர்த்தி செந்தூரனும்,  அனுசரணை & தயாரிப்பை சோ. […]

Read More

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடிப்பு: 7 பேர் காயம்; மூவர் கவலைக்கிடம்

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் இன்று (26) சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். வைத்தியசாலையின் சமையலறையில் எரிவாயு சிலின்டர் வெடிப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் வைத்தியசாலைக் கட்டடத்திற்குப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த வைத்தியசாலை ஊழியர்கள் சிகிச்சைக்காகப் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

கன்னியாவில் காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகளின் 19வது சமாதி தின விசேட பூஜை

(வி.ரி. சகாதேவராஜா) திருகோணமலை கன்னியா ஆத்ம யோக ஞான சபாவில் காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகளின் 19வது சமாதி தினத்தை முன்னிட்டு விசேட அபிஷேக பூஜை நேற்று  (24)  வியாழக்கிழமை காலை 9 மணிக்கு சிறப்பாக இடம்பெற்றது. கும்பாபிஷேகத்தின் பின்னர் இடம்பெற்ற முதலாவது குரு சமாதி தினம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆத்ம யோக ஞான சபாவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு குருவருள் […]

Read More

சைவபண்டிதர், இளஞ்சைவ பண்டிதர் பரீட்சை (2026) முடிவுகள்

சைவத் தமிழ் மன்றத்தின் அகில இலங்கை சைவ பண்டிதர் சபையினால் 2026 ஆம் ஆண்டு ஜுன் 27, 28, 29 ஆந் திகதிகளில் நடாத்தப்பட்ட சைவபண்டிதர், இளஞ்சைவ பண்டிதர் பரீட்சைகளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி சைவ பண்டிதர் பரீட்சையில் எண்மரும் (08), இளஞ்சைவ பண்டிதர் பரீட்சையில் இருபத்தியேழு (27) பேரும் சித்தியடைந்துள்ளனர். அவர்களது விபரம் மேல்வருமாறு: சைவ பண்டிதர் பரீட்சையில் சித்தி பெற்றவர்கள் 1.தனிஸ்ரா சத்தியேந்திரா, கொக்குவில், யாழ்ப்பாணம்2.புவனேஸ்வரன் ஜீவஅனோஜ், பெரியநீலாவணை, கல்முனை3.ராமன் ராமகிருஷ்ணன், நோவூட், நுவரெலியா4.ஹேமலோஜினி […]

Read More

கல்விப் பணியில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான பயணம்; அதிபர் டேவிட் அமிர்தலிங்கம் ஓய்வு.

(செல்வி வினாயகமூர்த்தி) அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையின் அதிபர் திலகம் டேவிட் அமிர்தலிங்கம் 34 ஆண்டுகால கல்விச் சேவையை நிறைவு செய்து இன்று (25) வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஓய்வு பெற்றார். இதனை முன்னிட்டு அவருக்கான சிறப்புப் பாராட்டு நிகழ்வு அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையில் நடைபெற்றது. பாடசாலையின் பிரதி அதிபர் க.ஜயந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஓய்வுபெறும் அதிபர் டேவிட் அமிர்தலிங்கம் ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக பேண்ட் வாத்திய இசையுடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் புடைசூழ […]

Read More