September 30, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > நற்பிட்டிமுனை மண்ணின் சாதனையாளர்களை கௌரவித்த அல்-கரீம் பவுண்டேஷன்!

நற்பிட்டிமுனை மண்ணின் சாதனையாளர்களை கௌரவித்த அல்-கரீம் பவுண்டேஷன்!

பாறுக் ஷிஹான்

பிரதம அதிதியாகப் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் பங்கேற்பு; ஊவா வெல்லச பல்கலைக்கழகப் பதிவாளர் எம். ஜெசீல் விசேட கௌரவம்

நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேஷன் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட “மண்ணுக்கு மகுடம் சூட்டிய சாதனையாளர்களை கௌரவிக்கும் விழா” நேற்று சனிக்கிழமை (26) சவளக்கடை ரோயல் கார்டன் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அல்-கரீம் பவுண்டேஷன் அமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி ஹலீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.

நற்பிட்டிமுனைப் பிரதேசத்தின் கல்வி, அரச சேவை மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு அளப்பரிய பங்களிப்பு வழங்கிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்களை அடையாளம் கண்டு, அவர்களின் சேவைகளைப் பாராட்டும் நோக்கில் இக் கௌரவிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் சான்றிதழ்கள் மற்றும் நினைவூட்டல்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், நீண்டகாலமாக அரச சேவையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி ஓய்வுபெற்ற அரச ஊழியர்களும் பாராட்டிப் கௌரவிக்கப்பட்டனர்.

குறிப்பாக, நற்பிட்டிமுனை மண்ணிலிருந்து உருவான முதலாவது பல்கலைக்கழகப் பதிவாளர் என்ற பெருமைக்குரிய ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் பதிவாளர் நாயாகம் முஹம்மட் ஜெசீல் அவர்கள் இந்நிகழ்வில் பொன்னாடை போர்த்தி விசேடமாகக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும், அல்-கரீம் பவுண்டேஷன் அமைப்பின் தவிசாளருமான சீ.எம். முபீத், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் எஸ். முஹம்மட் அலி ஜின்னா உட்பட உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், அரச உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சாதனையாளர்களை வாழ்த்தினர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *