September 15, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: admin

அம்பாறை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய மகோற்சவம் ஆரம்பம்.

(செல்வி வினாயகமூர்த்தி) வரலாற்று சிறப்புமிக்க அம்பாறை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவ விழா – எதிர்வரும் செப்டெம்பர் 4ஆம் திகதி நாளை வெள்ளிக்கிழமையுடன் ஆரம்பமாகி, செப்டெம்பர் 14ஆம் திகதி திங்கட்கிழமை தீர்த்தத் திருவிழாவுடன் நிறைவு பெறவுள்ளது. இதற்கான ஆரம்ப நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு விநாயகர் வழிபாடு உள்ளிட்ட கிரியைகளுடன் ஆரம்பமாகியுள்ளன. தொடர்ந்து. நாளை (04) வெள்ளிக்கிழமை காலை 7.00 மணிக்கு புண்ணியவாச பூசையுடன் கொடியேற்றம் இடம்பெறவுள்ளது. மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக […]

Read More

புதிய கிழக்கு மாகாண இராணுவ படைத் தளபதி, கிழக்கு ஆளுநருடன் சந்திப்பு

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண புதிய இராணுவ பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.என்.கே.டி. பண்டார, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவைச் சந்தித்து கலந்துரையாடிள்ளார்.குறித்த கலந்துரையாடலானது நேற்று (02.09.2026) ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. எதிர்கால நடவடிக்கைகள்இந்தச் சந்திப்பு ஒரு சுமுகமான கலந்துரையாடலாக அமைந்ததுடன், கிழக்கு மாகாணத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. கிழக்கு மாகாண மக்களின் அமைதி, பாதுகாப்பு மற்றும் நலனுக்காக, அரசுக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே தற்போதுள்ள ஒத்துழைப்பை […]

Read More

கல்முனை தமிழ் கோட்டத்தில் 97 மாணவர்கள் சித்தி

வெளியாகிய தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கல்முனை தமிழ் கோட்டத்தில் 97 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தி அடைந்துள்ளார்கள். மாணவர்களுக்கு கோட்டக்கல்விப்பணிப்பாளர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்  70 புள்ளிகளுக்கு மேல் 303 மாணவர்களும், 70 புள்ளிகளுக்கு கீழ் 32 மாணவர்களும் பெற்றுள்ளனர். மொத்தம் 432 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில், 92.59% சித்தி வீதம் பதிவாகியிருப்பது கல்முனை தமிழ் கோட்டத்தில் சிறப்பான பெறுபேறாகக் கருதப்படுகிறது. பாடசாலைகளின் சித்தி அடைந்த மாணவர்களும் எண்ணிக்கை வருமாறு கார்மேல் பற்றிமா – 74உவெஸ்லி -6விவேகானந்தா -5பெரிய நீலாவணை விஷ்ணு 4பாண்டிருப்பு மகா விஷ்ணு -3இராம கிருஷ்ண மிஷன் -2மாமாங்கம் -1கணேஷா – 1நாவலர் – 1

Read More

நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசர் ஆலய வருடாந்த பிரம்மோற்சவ விழா ; 5ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்

கல்முனை , நற்பிட்டிமுனை அருள்மிகு ஸ்ரீ கணேசர் தேவஸ்தானத்தின் வருடாந்த பிரம்மோற்சவ விழா எதிர்வரும் 5ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.35 மணி முதல் 12.00 மணி வரையான சுபமுகூர்த்த வேளையில் திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. ஆவணி மாதம் 19ஆம் நாள் நடைபெறும் இக்கொடியேற்ற நிகழ்வைத் தொடர்ந்து, தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. விழாவின் தீர்த்தோற்சவம் செப்டம்பர் 14ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறும். விழாக்காலங்களில் தினமும் காலை 6.45 மணிக்கும் மாலை 5.00 மணிக்கும் உற்சவங்கள் […]

Read More

எருவில் கண்ணகியில் நான்கு மாணவர்கள் சித்தி!

செல்லையா பேரின்பராசா  அண்மையில் வெளியான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் பிரகாரம் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் நான்கு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் என்று இப் பாடசாலை அதிபர் பேரின்பராசா ரேகாசலன் தெரிவித்தார். இதற்கமைய ஜெயானந்தம் மகினேஷ் (158 புள்ளிகள்) , கமலகாசன் ராகவர்ஷா (146 புள்ளிகள்) , திவிராஜ் டர்ஸ்வனா (140 புள்ளிகள்)  , பிரதீபன் அமிந்தனா (134 புள்ளிகள்) ஆகியோரே சித்தியடைந்த மாணவர்களாகும். இம் மாணவர்களுக்கு கல்வி புகட்டிய ஆசிரியை திருமதி ஜீவா ரேகாசலனுக்கு […]

Read More

காரைதீவு கோட்டத்தில்  48 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி!

( வி.ரி.சகாதேவராஜா)  ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் காரைதீவு கோட்டத்தில்  48 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதாக காரைதீவு கோட்டக்கல்வி பணிப்பாளரும்,பிரதி கல்விப் பணிப்பாளருமான ஆ. சஞ்சீவன் தெரிவித்தார்  காரைதீவில் 33 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.அந்த வகையில், காரைதீவு இராமகிருஷ்ண பெண்கள் பாடசாலை – 17 மாணவர்கள்,  இராமகிருஷ்ண ஆண்கள் பாடசாலை – 07 மாணவர்கள், சண்முகா மகா வித்தியாலயம் – 03 மாணவர்கள், விஷ்ணு வித்தியாலயம் – 03 மாணவர்கள், விக்கினேஸ்வரா வித்தியாலயம் […]

Read More

கனடாவில் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ள ChIDAES-Canada அமைப்பின் 21வது ஆண்டு விழா!

கனடா, செப்டெம்பர் 03: கிழக்கு இலங்கை குழந்தைகள் மேம்பாட்டுச் சங்கம் – கனடா (ChIDAES-Canada) அமைப்பின் 21வது ஆண்டு விழா மற்றும் 2026ஆம் ஆண்டிற்கான வருடாந்தக் கூடுகை எதிர்வரும் செப்டெம்பர் 12ஆம் திகதி சனிக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது. “21 ஆண்டுகள் – அன்பால் இணைந்த பயணம்!” என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ள இந்நிகழ்வு, மாலை 5.30 மணி முதல் Church of St. Stephen, 2259 Jane Street, North York, ON M3M 1A6 என்ற முகவரியில் […]

Read More

எல்நினோ பாதிப்பு; அம்பாறை  மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் தாக்கம் செலுத்தியது!

( வி.ரி.சகாதேவராஜா) சமகாலத்தில் நிலவும் எல்நினோ காலநிலை தாக்கம் தொடர்பில்  அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. அம்பாறை  மாவட்ட  அரசாங்க அதிபர் அனுபம மங்கள விக்ரமாராச்சியின் ஒருங்கிணைப்பிலும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ தலைமையிலும் நடைபெற்ற இவ்விசேட கூட்டம் நேற்று (1) நடைபெற்றது. எல்நினோ நிலைமையால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான தயார் நிலை தொடர்பில்  விளக்கமளிக்கப்பட்டது. […]

Read More

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 169 மாணவர்கள் சித்தி. திருக்கோவில் கல்வி வலயம் மீண்டும் சாதனை.

(செல்வி வினாயகமூர்த்தி) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று (02) புதன்கிழமை வெளியாகியுள்ள நிலையில் திருக்கோவில் கல்வி வலயம் இவ்வாண்டும் சிறப்பான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது. 2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட 882 மாணவர்கள் தோற்றிய நிலையில், 810 மாணவர்கள் 70 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று 91.84 சதவீதத்தைப் பதிவு செய்துள்ளனர். மேலும், 169 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர்.கடந்த 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு பெறுபேறுகளில் குறிப்பிடத்தக்க […]

Read More

சுற்றுலாவிகளை சுண்டி இழுக்கும் நுவரேலியா கிறஹரி ஏரி

( வி.ரி. சகாதேவராஜா)  அண்மைக்காலமாக மலையக சுற்றுலாவில்   நுவரேலியா கிறஹரி ஏரி சுற்றுலாவிகளை சுண்டி இழுக்கும் பிரதான மையமாக திகழ்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாவிகள் அங்கு செல்கின்றனர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அங்குள்ள பனிமூட்டம் குளிர்கால சூழ்நிலை லேசான தூறல் என்பன சகலதரப்பினரையும் கவர்ந்திழுக்கின்றது. குறிப்பாக படகுச்சவாரி, ஜெற் அதிவேக படகுச் சவாரி ,குதிரைச் சவாரி என்பனவும் சிற்றூண்டிகளும் பலரையும் கவர்ந்திழுக்கின்றன.

Read More