September 16, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: admin

சாய்ந்தமருது பிரதான வீதியில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது-மங்காத்தா திரைப்பட பாணியில் அதிரடி காட்டிய  பொலிஸ் பரிசோதகர்

பாறுக் ஷிஹான் கார் ஒன்றில் போதைப்பொருட்களை கடத்திச் சென்றவர்களை துரத்தி சென்று பிடித்த சம்பவம் மக்கள் மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக இச்சம்பவம் சனிக்கிழமை (4) இடம்பெற்றது. குறித்த சோதனை நடவடிக்கையின் போது 32 ,33, 34 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் ஹெரோயின் போதைப்பொருள் 15 கிராம் 370 மில்லி கிராம் உட்பட  சொகுசு கார், மோட்டார் […]

Read More

டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் வெறுப்புப் பேச்சுக்களைக் கையாளுதல் குறித்து அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் வெறுப்புப் பேச்சுக்களைக் கையாளுதல் குறித்த விசேட செயலமர்வு இன்று காலை அக்கரைப்பற்று மாநகர சபை மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ​”சமூக நல்லிணக்கத்திற்கான பொறுப்புள்ள டிஜிட்டல் சமூகம் – கட்டம் 2″ (Responsible Digital Society for Social Cohesion- Phase 2) எனும் செயற்திட்டத்தின் கீழ் இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ​சர்வோதயம் அமைப்பு, யுனிசெப் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இந் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. […]

Read More

அக்கரைப்பற்று CDFF கிளையினால் கதிராகாம பாதயாத்தியர்களுக்கு ஒரு தொகை மருந்து பொருட்கள் வழங்கி வைப்பு.

வடிவேல் டினேஸ் எதிர்வரும் 10 ஆம் திகதி உகந்தை காட்டுப் பாதை ஊடாக கதிர்காமம் ஆலயம் நோக்கி பாதயாத்திரை மேற் கொள்ளும் அடியவர்கள் தற்போது தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் கடந்த மே மாதம் யாழ் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ப்தயாத்திரை மேற் கொண்ட குழுவினர் தற்போது அம்பாறை மாவட்டத்தை வந்தடைந்துள்ளனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பாதயாத்திரை அடியார்கள் இதில் உள்ளடங்குகின்றனர். இவர்கள் தற்போது அம்பாறை […]

Read More

கல்முனை வைத்தியசாலைக்கு ரூ. 7 கோடி பெறுமதி அதிநவீன ஆர்த்ரோஸ்கோபி கருவி வழங்கப்பட்டது

பிராந்திய மக்களுக்கு வரப்பிரசாதம் என்கிறார் வைத்திய நிபுணர் கலாநிதிவேந்தன் (வி.ரி. சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு 68 மில்லியன் (6.8 கோடி) ரூபா பெறுமதியான அதிநவீன ஆர்த்ரோஸ்கோபி கருவி வழங்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன தலைமையில் அங்கு விஜயம் செய்தபோது, ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் மற்றும் எலும்பு முறிவு சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் மருத்துவர் பி. கலாநிதிவேந்தன் ஆகியோரிடம் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது. அம்பாறை […]

Read More

சர்க்கரை கலந்த பானங்களுக்கு புதிய வண்ணக் குறியீடு; விசேட வர்த்தமானி வெளியீடு

சர்க்கரை கலந்த திரவ உணவுகளுக்கான வண்ணக் குறியீட்டு விதிமுறைகளில் திருத்தம் செய்து, அதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 1980 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க உணவுச் சட்டத்தின் 32 ஆம் பிரிவின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இந்த திருத்தங்களின்படி, சர்க்கரை கலந்த திரவ உணவுப் பொட்டலங்களில் இடம்பெற வேண்டிய வண்ணக் குறியீடுகளின் வடிவமைப்பு மற்றும் காட்சிப்படுத்தல் தொடர்பான புதிய விதிமுறைகள் […]

Read More

கல்முனை மாநகர சபையின்திண்மக்கழிவகற்றல் சேவைக்காக 02 புதிய ட்ரெக்டர்கள்.!

கல்முனை மாநகர சபையின் சேவை மேம்பாட்டுக்காக கொள்வனவு செய்யப்பட்ட 02 புதிய ட்ரெக்டர்கள், திண்மக்கழிவகற்றல் சேவைக்காக மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களினால் சுகாதாரப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டு, சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கல்முனை மாநகர சபையின் சேவை மேம்பாட்டுக்காக கொள்வனவு செய்யப்பட்ட 02 புதிய ட்ரெக்டர்கள், திண்மக்கழிவகற்றல் சேவைக்காக மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களினால் சுகாதாரப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டு, இன்று முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் கணக்காளர் அஹ்சன் மனாஸிர், வேலைகள் […]

Read More

ஆயுர்வேத வைத்தியசாலைகளின் சேவைகள் டிஜிட்டல் மயமாகிறது:கிழக்கு மாகாணத்தில் “eAyurvedic” செயலி அறிமுகம்!

பாறுக் ஷிஹான் அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்திற்கு அமைவாக, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் மாகாணத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளின் சேவைகளை “eAyurvedic” எனும் செயலி மூலமாக டிஜிட்டல் மயப்படுத்தி வருகிறது. மாகாண ஆயுர்வேத வைத்தியசாலைகளின் சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் இத்திட்டம், அம்பாறை மாவட்ட வைத்தியசாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. குறித்த திட்டத்தின் கீழ், கல்முனை பிராந்திய ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு கணினிகள் உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (03) கல்முனை பிராந்திய […]

Read More

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான குழுவினர் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை சந்தித்தனர்

தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை இன்று நேரில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, பல்வேறு முக்கிய விடயங்களை உள்ளடக்கிய கோரிக்கை மனுவொன்றும் அவரிடம் கையளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திப்பில், ஈழத்தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல் மற்றும் மனித உரிமைச் சவால்கள், ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறைக்கு பதிலாக தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வின் அவசியம், ஈழத்தமிழர் இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டிய […]

Read More

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதியான வசந்த கரன்னாகொடவை, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இன்று கைது செய்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை இலங்கை கடற்படையில் இணைத்துக் கொண்டு, பிரித்தானிய கடற்படை அகாடமிக்கு பயிற்சிக்காக அனுப்பியமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு அவருக்கு ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியதைத் தொடர்ந்து, விசாரணைகளின் அடிப்படையில் வசந்த கரன்னாகொட கைது செய்யப்பட்டதாக […]

Read More

எதிர்கால சுகாதாரச் சவால்களுக்கு திறமையான பணியாளர்கள் அவசியம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

எதிர்கால சுகாதாரச் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள, காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்ட சுகாதாரப் பணியாளர்களை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகம் தனது நூற்றாண்டு விழாவை (1926–2026) முன்னிட்டு களுத்துறையில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டார். இலங்கையின் பொதுச் சுகாதாரப் பணியாளர்களை உருவாக்குவதிலும், நோய் தடுப்பு சேவைகளை வலுப்படுத்துவதிலும் தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகம் […]

Read More