September 15, 2026

Blog Post

Kalmunai Net > பிரதான செய்தி > அர்ச்சுனாவுக்கு பயங்கரவாத தடுப்பு பரிவில் விசாரணை ஆரம்பம்

அர்ச்சுனாவுக்கு பயங்கரவாத தடுப்பு பரிவில் விசாரணை ஆரம்பம்

அர்ச்சுனா ராமநாதன் எம்பிக்கு எதிராக பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணை ஆரம்பம்

அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் கருத்துகள் வெளியிடப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்த பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு (TID) உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, சமூக செயற்பாட்டாளர்கள் குழுவொன்று, அநுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் பேரணியில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் அல்லது ஆதரிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்திருந்தது.

செப்டெம்பர் 12ஆம் திகதி அநுராதபுரம் மாநகர சபை மைதானத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் பேரணியில் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உரையாற்றியிருந்தார்.

tamilwin

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *