September 15, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: Kethees

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு துறைநீலாவணை பொது தூலகத்தில் மாணவர்களுக்கிடையிலான சித்திரப் போட்டி

செல்லையா பேரின்பராசா உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் கீழ் இயங்கும் துறைநீலாவணை பொது தூலகத்தில் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சித்திரப் போட்டி 15.09.2026 செவ்வாய்க் கிழமை இடம்பெற்றது. இப் போட்டியில் துறைநீலாவணையில் உள்ள சித்திவிநாயகர் வித்தியாலயம்,  மெதடிஸ்த மிஸன் தமிழ் கலவன் பாடசாலை, விபுலாநந்த வித்தியாலயம் என்பவற்றில் கல்வி பயிலும் ஆரம்ப பிரிவு மாணவர்கள் பங்குபற்றினர். இப் போட்டிகளை நூலக உதவியாளர்களான திருமதி மோவிதா கவிதாஸ்,  சி.திவிசன் ஆகியோர் மேற்பார்வை செய்து […]

Read More

27 ஆண்டுகால கல்விச் சேவையின் தொடர்ச்சியாக அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிஷன் புதிய அதிபராக தங்கராசா இராசநாதன்.

(செல்வி வினாயகமூர்த்தி) அம்பாறை மாவட்டம், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று கமு/திகோ இராமகிருஷ்ண மிஷன் மகாவித்தியாலயத்தின் புதிய அதிபராக தங்கராசா இராசநாதன் 07.09.2026 அன்று கடமையேற்றுள்ள நிலையில், அவரை வரவேற்கும் நிகழ்வு இன்று (15.09.2026) செவ்வாய்க்கிழமை பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. 1998.01.26ஆம் திகதி கமு/திகோ கண்ணகி வித்தியாலயத்தில் ஆசிரியராக நியமனம் பெற்ற தங்கராசா இராசநாதன், பின்னர் கமு/திகோ/ திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் மகாவித்தியாலயத்திலும், கமு/திகோ/கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயத்திலும் ஆசிரியராகப் பணியாற்றினார். 2016ஆம் ஆண்டு அதிபர் சேவைக்கான பரீட்சையில் […]

Read More

சம்மாந்துறை நீச்சல் தடாகம் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு !பிரதேச சபை தவிசாளரின் துரித நடவடிக்கைக்கு உறுப்பினர். MLA.கபூர் பாராட்டு !!

சம்மாந்துறை நீச்சல் தடாகம் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு !பிரதேச சபை தவிசாளரின் துரித நடவடிக்கைக்கு உறுப்பினர். MLA.கபூர் பாராட்டு !! (மின்மினி மின்ஹா) சம்மாந்துறை ஜனாதிபதி கலாச்சார விளையாட்டு நிலையத்தில் அமைந்துள்ள நீச்சல் தடாகம் பல மாதங்களாகச் செயற்பாடின்றி காணப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்காக இயங்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீச்சல் தடாகம் நீண்டகாலமாகச் செயற்படாமல் காணப்படுவது தொடர்பில் கௌரவ MLA கபூர் அவர்களினால் 18.06.2026ல் சமூக வலைத்தளங்களில் பல்வேறு பதிவுகளும் , முகநூல் மற்றும் […]

Read More

பாலையடியில் கொட்டும் மழைக்கு மத்தியில் களைகட்டிய தேரோட்டத் திருவிழா 

(   வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு ஸ்ரீ பாலையடி வாலவிக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த  மகோற்சவத் திருவிழாவின் தேரோட்டத் திருவிழா நேற்று  (14) திங்கள் கிழமை கொட்டும் மழைக்கு மத்தியில் சிறப்பாக நடைபெற்றது.  திருவிழாக்கள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள்  தலைமையில், மகோற்சவ குரு சுவிஸ் தூண் வரசித்தி விநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சிவ பிரபாகரக் குருக்கள் முன்னிலையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான ஆண் பெண் பக்தர்கள் மழைக்கு மத்தியில் ” அரோஹரா” […]

Read More

கிழக்கு மாகாணத்தில் CBC Finance சேவைகள் விரிவு: கல்முனையில் 25ஆவது புதிய கிளை கோலாகல திறப்பு- பாடசாலைக்கு கணினி ஆய்வகமும் அன்பளிப்பு

பாறுக் ஷிஹான் கல்முனை, மட்டக்களப்பு வீதி, இலக்கம் 42 இல் அமைந்துள்ள இப்புதிய கிளையானது, பிராந்தியத்தின் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள், வர்த்தகர்கள் மற்றும் சில்லறை வாடிக்கையாளர்களுக்கு நவீன வங்கிச் சேவைகளை வழங்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது. CBC Finance PLC இன் தலைவர் ஷர்ஹான் முஹ்சின் (Sharhan Muhseen) தலைமையில் நடைபெற்ற இத்திறப்பு விழாவில், நிறுவனத்தின் சிரேஷ்ட இயக்குநர் சரத் ஜயசூரிய, இயக்குநர்களான எம்.பி. தர்மசிரி, ஷர்மினி விக்ரமசேகர, நிறைவேற்றுப் பணிப்பாளர் டெலக்ஷன் ஹெட்டியாராச்சி, பிரதம வணிக […]

Read More

கிழக்கில் 17கல்விவலயங்களுள் திருக்கோவில்  வலயம் முதலிடம் – வலயக் கல்விப் பணிப்பாளர் உதயகுமார் பெருமிதம்!

( வி.ரி.சகாதேவராஜா) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 79.59 சதவீத சித்தியைப் பெற்று கிழக்கு மாகாணத்தில் 17 கல்வி வலயங்களுள்  முதலாம் இடத்தை திருக்கோவில் வலயம் பெற்று சாதனை படைத்துள்ளது. கிழக்கில் இரண்டாம் இடத்தில் மட்டக்களப்பு வலயமும்,  மூன்றாம் இடத்தை அம்பாறை வலயமும், நான்காவது இடத்தில் தெகியத்த கண்டிய வலயமும் ஐந்தாவது இடத்தில் கல்முனை வலயமும் பெற்று முதல் ஐந்து இடங்களை அலங்கரிக்கின்றது. நேற்று இத்தரப்படுத்தல் பகுப்பாய்வு அறிக்கை வெளியானது.  திருக்கோவில் கல்வி வலயத்தில் இம்முறை 169 […]

Read More

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பிரதி அதிபராக எம்.சி.அப்துல் நஸார் நியமனம்

(மருதமுனை செய்தியாளர்) மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் புதிய பிரதி அதிபராக எம்.சி. அப்துல் நஸார் திங்கட்கிழமை (14) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய பிரதி அதிபரை வரவேற்கும் நிகழ்வு பாடசாலை சமூகத்தின் ஏற்பாட்டில் பாடசாலை வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் எம்.பி. அகமட் ராஜி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கத்தினர், நலன்விரும்பிகள், உதவி அதிபர்கள், சிரேஷ்ட பகுதி தலைவர்கள் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் […]

Read More