September 15, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: admin

சுப்பிரமணிக்கு காட்டிற்குள் செல்ல தடை: வாகனத்தில் காட்டுப்பாதை முடிவு வரை செல்லும்!

சிறுத்தையால் சுப்பிரமணிக்கும் அடியார்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம்;காட்டுக்குள் சுப்பிரமணி செல்வதற்கு வாய்ப்பில்லை!வனஜீவராசிகள் திணைக்களம் அறிவிப்பு ( வி.ரி.சகாதேவராஜா) சமகாலத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் கூடுதலாக இருப்பதால் அது சுப்பிரமணிக்கும் அடியார்களுக்கும் பாதிப்பு ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளன.எனவேகாட்டுக்குள் சுப்பிரமணியை கொண்டு செல்வதற்கு வாய்ப்பில்லை. இவ்வாறு வனஜீவராசிகள் திணைக்கள சட்ட ஆலோசகரும்சுற்றாடலியலாளருமான கந்தையா பிரியதர்சனி தெரிவித்தார். சுப்பிரமணிக்கு காட்டுக்குள் செல்ல அனுமதி மறுப்பு என்ற செய்தி காட்டுத்தீ போல் பரவியதைத் தொடர்ந்து நாம் அவருடன் நேரடியாக தொடர்பு கொண்டு பேசிய போது […]

Read More

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சர்வதேச கூட்டுறவு தின சிறப்பு நிகழ்வு

செல்லையா பேரின்பராசா.  கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சர்வதேச கூட்டுறவு தினத்தை சிறப்பிக்கும் வகையில் 01.07.2026  புதன்கிழமை ஒன்றுகூடல் நிகழ்வு இடம்பெற்றது. இக் கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி செ. உதயகுமார்  அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.  மேற்படி நிகழ்வுகளை இரண்டாம் வருட  விஞ்ஞான கல்விநெறி ஆசிரிய மாணவன்  எ.எம்.சராப்தீன் முன்னிலைப்படுத்தினார். எளிய மனிதர்களின் ஆயுதம் கூட்டுறவு என்னும் காணொளி –  ஆங்கிலநெறி ஆசிரிய […]

Read More

இன்று களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு ரோட்டரியின் மருத்துவ முகாம்   

( வி.ரி. சகாதேவராஜா) பட்டிருப்பு றொட்டரி கழகத்தினால் ஏற்பாடு செய்திருந்த  மண்முனை தென் எருவில்பற்று பிரதேச உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ முகாமானது பிரதேச செயலாளர்  உ. உதயஸ்ரீதர் தலைமையில், பட்டிருப்பு றொட்டரி கழக தலைவர் ரோட்டரியன் நிறோசாந்  பங்குபற்றுதலுடன் இன்று (2026.07.01) புதன்கிழமை பிரதேச செயலக ஒன்றுகூடல்  மண்டபத்தில் இடம்பெற்றது.   இதன் போது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள், கண் பரிசோதனை மற்றும் மூக்குக் கண்ணாடி வழங்கல் போன்றன இடம் பெற்றது.  இந்த முகாமில் நூற்றுக்கு மேற்பட்ட […]

Read More

பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர்களின் பொதுக்கூட்டம் ஜூலை 4ஆம் திகதி

மட்/பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், 2026ஆம் ஆண்டிற்கான விளையாட்டு விழா மற்றும் நடைபவணியை முன்னிட்டு அனைத்து பழைய மாணவர்களுக்குமான பொதுக்கூட்டம் எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி (சனிக்கிழமை) பிற்பகல் 3.00 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. விளையாட்டு விழா மற்றும் நடைபவணி தொடர்பான ஏற்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதால், அனைத்து பழைய மாணவர்களும் தவறாது கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பாக முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன், […]

Read More

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி  விற்பனை- ஒரு லட்சம்  அபராதம் விதிப்பு

பாறுக் ஷிஹான்அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கிவரும் வர்த்தக நிலையம் ஒன்றிற்கு, அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையை மீறி இறக்குமதி செய்யப்பட்ட பால் பொன்னி (import Paal Ponni) அரிசியை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் ரூ.100,000/= அபராதம் விதித்து அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் இன்று (1) உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, 2 கிலோகிராம் இறக்குமதி செய்யப்பட்ட பால் பொன்னி அரிசி பொதியை அரசாங்கம் […]

Read More

பாதயாத்திரிகர்களுக்கு வெற்றியின் கரங்கள் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு!

( வி.ரி.சகாதேவராஜா)  காரைதீவு வெற்றியின் கரங்கள் அமைப்பு யாழ்.கதிர்காம பாதயாத்திரிகர்களுக்கு உணவுப் பொதிகளை வழங்கி வைத்தது.  பாதயாத்திரிகர்களின் நீண்ட ஆன்மீகப் பயணத்திற்குப் பக்கபலமாக நிற்கும் வகையில், V9 Creations Private Limited-இன் ‘வெற்றியின் கரங்கள்’ அமைப்பு, ஒரு மனிதாபிமான சேவையை முன்னெடுத்திருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் திங்கட்கிழமை  மடத்தடி மீனாட்சி அம்மன் கோயில் ஆலயத்தின் முன்றலில், பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்த 130-க்கும் மேற்பட்ட யாத்திரிகர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொதிகளும், நீர் போத்தல்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. ‘வெற்றியின் கரங்கள்’ அமைப்பு, […]

Read More

கல்முனை வடக்கு பிரதேச செயலக ஆனி மாத பௌர்ணமி கலை விழாநேற்று சிறப்பாக நடைபெற்றது!

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த ஆனி மாத பௌர்ணமி கலை விழா – 2026 நேற்று (30.06.2026) செவ்வாய்க்கிழமை பெரியநீலாவணையில் அமைந்துள்ள கலை கலாசார மேம்பாட்டு மையத்தில் பிரதேச செயலாளர் திரு. ரி.ஜே. அதிசயராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பாரம்பரிய மற்றும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. அதன்படி தமிழ் மொழி வாழ்த்து ,வரவேற்பு நடனம், பரதநாட்டியம் ,மயில் நடனம், பரதக் கலைநிகழ்ச்சிகள், குழு […]

Read More

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளராக வைத்திய கலாநிதி இரா. முரளீஸ்வரன் பொறுப்பேற்பு!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகப் பணியாற்றி வந்த டாக்டர் கலாரஞ்சனி ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, அப்பதவிக்கான இடைக்கால ஏற்பாடாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரான வைத்திய கலாநிதி இரா. முரளீஸ்வரன் அவர்கள் இன்று (01) முதல் பதில் பணிப்பாளராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கிழக்கு மாகாணத்தின் முக்கிய நிலை சிகிச்சை நிலையங்களில் ஒன்றாக விளங்குவதுடன், தினசரி பல் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வருகிறது. இதன் நிர்வாகப் பொறுப்பை இடைக்கால அடிப்படையில் வைத்திய […]

Read More

பாதயாத்திரை குழு அக்கரைப்பற்றை வந்தடைந்தது;மிருகவதைத் தடுப்பு அமைப்பு சுப்ரமணியன் காட்டுக்குள் பயணிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு

கதிர்காமம் பாதயாத்திரையின் 41ஆம் நாள்: பாதயாத்திரை குழு அக்கரைப்பற்றை வந்தடைந்தது; மிருகவதைத் தடுப்பு அமைப்பு சுப்ரமணியன் காட்டுக்குள் பயணிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு செல்வி வினாயகமூர்த்தி வரலாற்றுச்சிறப்பு மிக்க கதிர்காமம் நோக்கிய வருடாந்த பாதயாத்திரையின் 41ஆம் நாளான இன்று (30) செவ்வாய்கிழமை பாதயாத்திரை குழுவினர் அக்கரைப்பற்று ஸ்ரீ சித்திவிநாயகர் மகா தேவஸ்தானத்தை வந்தடைந்தனர். வருகை தந்த பக்தர்களுக்கும், அவர்களுடன் பயணித்துவரும் ‘சுப்பிரமணியன்’ எனும் நாய்க்கும் ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இணைந்து சிறப்பான வரவேற்பு அளித்ததுடன், உபசரிப்புகளும் […]

Read More

அம்பாறை மாவட்ட விசேட வீதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்…

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட விசேட வீதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (30.06.2026) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.பாராளுமன்ற உறுப்பினர் திருமதி எம். எம். முத்து மெனிகே தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபர் அனுர மங்கள விக்ரமாராச்சி ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்கள் , மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் வீதி அபிவிருத்தி திட்டங்கள், மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் நிலவும் வீதி தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை மேற்கொள்வதன் […]

Read More