September 15, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: admin

ஹரக் கட்டா’ இலஞ்ச வழக்கு: மூவர் ஜூலை 3 வரை விளக்கமறியலில்!

பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினரான ‘ஹரக் கட்டா’வை பூஸ்ஸ சிறையிலிருந்து மாற்றுவதற்காக 120 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ, ஹொரண தொகுதி சஜப அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் அருண் ஸ்ரீ சதுரங்க ஆகிய மூவரையும் எதிர்வரும் ஜூலை 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்களில் இருவருக்கு கடுமையான உடல்நலக் குறைபாடுகள் இருப்பதாக அவர்களின் சட்டத்தரணிகள் தெரிவித்து […]

Read More

எல்லே கார்னிவல் மகளிர்  போட்டி இன்று ஆரம்பம்; நாளை இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும்!!

( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு 2003 சாதாரண தர மற்றும் 2006 உயர்தர பழைய மாணவர் குழுவினரின் ஏற்பாட்டில், “ELLE Carnival Women’s Trophy 2026 – Season 02” எனும் மகளிர் எல்லே விளையாட்டுப் போட்டி இன்று 27ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் நாளை  28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையில் , காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது. நாளை(28) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் ஒன்றியத் தலைவர் யூ.துஷான் தலைமையில் […]

Read More

கல்முனையில் மீன் வாடியில் வெடிப்பு -நால்வர் படுகாயம்

கல்முனையில்  மீன் வாடியில் வெடிப்பு -நால்வர் படுகாயம் ( பாறுக் ஷிஹான்) மீன் களஞ்சிய வாடியில் உள்ள  வாயு மீள் நிரப்பும்   பகுதியில் இடம்பெற்ற அனர்த்தத்தில் 4 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை பள்ளிவாசல் அருகில் கடலோரம் அமைந்துள்ள மீன் களஞ்சிய வாடியில்  வெள்ளிக்கிழமை(26) மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பழுதடைந்திருந்த எரிவாயு நிரப்பு நிலையத்தில் பழுதுபார்ப்பதற்காக வருகை தந்தவர்களே இவ்வனர்த்தத்தில் […]

Read More

மகளிர் அமைப்பின்தலைவியாக சிவகெளரி.!

-அஸ்லம் – தலைநகரில் தனித்துவத்தோடு இயங்கும் புதிய அலை கலை வட்ட மகளிர் அணியின் தலைவியாக திருமதி சிவகௌரி (சுடரி) தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொருளியல்மாணி சிறப்புக் கற்கை மற்றும் உளவியல் சான்றிதழ் கற்கை நிறைவு செய்துள்ளதுடன் யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் ஆங்கில டிப்ளோமாவை பூர்த்தி செய்தவர் ஆவார். தொழில் ரீதியாக 2008 இல் பதிவாளர் நாயக திணைக்களத்தில் மேலதிக மாவட்ட பதிவாளராக முதல் நியமனம் பெற்றவர். தற்போது வவுனியா மாவட்ட பதிவகத்தில் […]

Read More

உப தலைவியாக தெரிவானார் சிபானியா.!

(அஸ்லம் எஸ்.மௌலானா) புதிய அலை கலை வட்ட மகளிர் அணியின் உப தலைவியாக எம்.எப். பெளசுல் சிபானிய தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த காலங்களில் மகளிர அமைப்பின் அநுராதபுரம் மாவட்டத்தின் இணைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த இவர் அன்மையில் நடைபெற்ற நிர்வாகத் தெரிவில் அனைவரதும் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று உப தலைவியானார். கலைப்பட்டதாரி ஆசிரியையான இவர்தமிழ் இலக்கணத்தை முறையாக கற்றவர். அந்திக்கரை என்ற மரபுக் கவிதை தொகுப்பினை அதற்கு சான்றாக சமர்பித்த சிறந்த கவிஞராவார். அத்தோடு முற்றத்து நிலா பாடல் என்ற […]

Read More

இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆய்வுக்கூடம் திறந்து வைப்பு!

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு மைல்கல் நிகழ்வாகவும் நீண்டகாலக் கனவாகவும் இருந்த விஞ்ஞான ஆய்வுகூடம் 2026.06.26 ஆம் திகதி மிக கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைக்கு வித்திட்டவர், பாடசாலையின் அதிபர் திரு. ஏ.ஜி.எம். றிஷாத் அவர்கள் என்றால் அது மிகையாகாது. அதிபரின் அயராத முயற்சியும், தொலைநோக்குப் பார்வையும், அர்ப்பணிப்புமிக்க வழிநடாத்துதலுமே இந்தக் கனவை நனவாக்கியதன் பின்னணியாக அமைந்துள்ளது என்று பெருமிதத்துடன் குறிப்பிடலாம். பாடசாலை அதிபர் […]

Read More

மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்ற “தொழில் முனைவோர் உதயம் வர்த்தக கண்காட்சி 2026”

மட்டக்களப்பு மாவட்ட , மக்கள் வங்கி பிராந்திய காரியாலயமும் , மாவட்டத்தில் உள்ள மக்கள் வங்கி கிளைகளும் இணைந்து நடத்திய “தொழில் முனைவோர் உதயம் வர்த்தக கண்காட்சி 2026” இன்று 26.06.2026 மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வங்கி பிராந்திய முகாமையாளர் திரு.K. கோடீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இன்நிகழ்வுக்கு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோத்தர் திரு.B. கோகுலராஜன், கைத்தொழில் அபிவிருத்தி சபையின் மட்டக்களப்பு மாவட்ட விற்பனை மேம்படுத்தல் உத்தியோகத்தர் திரு. […]

Read More

களைநெல் கட்டுப்பாடு குறித்து அக்கரைப்பற்று கிழக்கு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்வு!

(செல்வி வினாயகமூர்த்தி) நாடு முழுவதும் விவசாயத் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் களைநெல் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விரிவாக்கல் நிலையத்தினால் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்வு (25) வியாழக்கிழமை அக்கரைப்பற்று பனங்காடு பிரதேசத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட நெல் பாடவிதான உத்தியோகத்தர் ஏ.ஐ.ஏ. பெரோஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் களைநெல் முகாமைத்துவம், அதனைக் கட்டுப்படுத்தும் முறைகள், வயல் சுகாதாரத்தைப் பேணுவதன் அவசியம் மற்றும் களைநெல்லை பாதுகாப்பான முறையில் அகற்றி எரித்து அழிக்கும் நடைமுறைகள் தொடர்பாக […]

Read More

GCE O/L பரீட்சை முடிவுகள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பங்கள் இன்று முதல்!

2025 (2026) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (GCE O/L) பரீட்சை முடிவுகளின் மறுமதிப்பீட்டிற்கான விண்ணப்பங்களை இன்று (25) முதல் ஜூலை 8 ஆம் திகதி வரை இணையவழியில் சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, பரீட்சை முடிவுகளில் திருப்தியற்ற மாணவர்கள் மற்றும் பெறுபேறுகளில் திருத்தங்களை மேற்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள், திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மறுமதிப்பீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க விரும்புவோர் […]

Read More

நாட்டை வீழ்ச்சியடையச் செய்த ஊழலுக்கு எதிரான கடும் நடவடிக்கை தொடரும் : சட்டம் யாவருக்கும் சமம் : ஜனாதிபதி

ஊழல் மூலம் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சொத்துகள் குறித்து ஜனாதிபதி கருத்து ஊழல், மோசடி மற்றும் குற்றச்செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட பெருமளவிலான பணம் டொலர் வடிவில் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், சிலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். நாட்டின் பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்புகள் வீழ்ச்சியடைவதற்கு ஊழலே முக்கிய காரணமாக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், இது தனிப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கை அல்ல என்றும், போதைப்பொருள் வர்த்தகம், […]

Read More