September 16, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: admin

சிறப்புக்கட்டுரை – சம்மாந்துறை நீச்சல் தடாகம் மூடப்பட்டது; இளைஞர் எதிர்காலம் கேள்விக்குறியா? மின்மினி மின்ஹா)

(கட்டுரை – மின்மினி மின்ஹா) ஒரு நகரத்தின் விளையாட்டு வளர்ச்சியை அளவிட வேண்டுமெனில், அங்குள்ள விளையாட்டு மைதானங்கள், பயிற்சி மையங்கள், உடற்கல்வி வசதிகள் மற்றும் இளைஞர்களுக்கான பொது உள்கட்டமைப்புகளைப் பார்ப்பது போதுமானது. அந்த வகையில், சம்மாந்துறை பிரதேசத்தின் பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்றாக இருந்த ஜனாதிபதி விளையாட்டு கட்டிடத் தொகுதிக்குள் அமைந்துள்ள நீச்சல் தடாகம், இன்று பழுதடைந்த நிலையில் நீண்டகாலமாக கைவிடப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒருகாலத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்களின் பயிற்சி மையமாகவும், குடும்பங்களின் ஓய்வு நேரச் […]

Read More

நாளை (20) இ.கி.மிசன் மட்டு.மாணவர் இல்லத்தின் நூற்றாண்டு விழா

( வி.ரி. சகாதேவராஜா) மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தின் 100வது ஆண்டு நிறைவு விழா நாளை 20 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு, ஆசிரம வளாகத்தில் நடைபெறவுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து முன்னாள் மாணவர்கள், நன்கொடையாளர்கள், கல்வியாளர்கள், சமூகப் பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.  இந்நிகழ்வில், மாணவர் இல்லத்தின் நூற்றாண்டு பயணத்தையும் அதன் கல்வி மற்றும் சமூக சேவைகளையும் நினைவுகூரும் நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. இராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம் கடந்த […]

Read More

அன்னமலை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார ஆனி உத்தர தீர்த்தோற்சவ பெருவிழா – 2026

அன்னமலை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த அலங்கார ஆனி உத்தர தீர்த்தோற்சவப் பெருவிழா 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வுகள்: 🔸 கொடியேற்றம்: 2026.06.17 (புதன்கிழமை)🔸 தீர்த்தோற்சவம்: 2026.06.22 (திங்கட்கிழமை) விழா நிகழ்ச்சிகள்: 🔹 2026.06.16 முதல் 2026.06.22 வரை தினமும் விசேட பூஜைகள், கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனைகள் மற்றும் சுவாமி வீதியுலா இடம்பெறும்.🔹 விழா நாட்களில் தினமும் பிற்பகல் 4.00 மணிக்கு அருளுரை நிகழ்ச்சியும் பகல் […]

Read More

பாண்டிருப்பு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய வாயிற் கோபுர திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது

பாண்டிருப்பு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயம், பாண்டிருப்பு ஆலயத்தின் புதிய வாயிற் கோபுர திறப்பு விழா இன்று (2026.06.18) வியாழக்கிழமை மிகச் சிறப்பாகவும் பக்தி உணர்வுடன் கூடிய சூழலிலும் நடைபெற்றது. காலை 08.30 மணி முதல் 10.30 மணி வரையான சுப நேரத்தில் கோபுர தரிசன நிகழ்வும், அதனைத் தொடர்ந்து கோபுர கும்பாபிஷேக நிகழ்வுகளும் இடம்பெற்றன. இவ்விழாவிற்கு ஆலயத்தின் தலைவர் வே. பாலசுப்பிரமணியம் அவர்கள் தலைமையேற்றார். ஆன்மிக அதிதிகளாக பாண்டிருப்பு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய பிரதம […]

Read More

கலை மற்றும் கலாச்சார மேம்பாட்டு மையம் திறப்பு விழா (19) நாளை- கிழக்கு ஆளுநர் பிரதம அதிதி

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், பெரியநீலாவணையில் அமைக்கப்பட்டுள்ள உள்ளூர் கலாசாரம் மற்றும் கலைஞர்களுக்கான கலை மற்றும் கலாசார மேம்பாட்டு மையம்’ திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வு நாளை 19 ஜூன் 2026 மாலை 4:30 மணிக்கு பெரியநீலாவணை, மத்திய வீதியில் அமைந்துள்ள குறித்த மையத்தில் நடைபெறவுள்ளது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப்பணிப்பாளர் திருமதி மேனகா புவிகுமார் அவர்கள் தலைமைதாங்கவுள்ள இந் நிகழ்வுக்கு , முதன்மை விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநர். கலாநிதி. ஜயந்த லால் ரத்னசேகர […]

Read More

சுற்றுலா மேம்பாட்டு நிதி முறைகேடு குற்றச்சாட்டு: பெசில் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

சுற்றுலா மேம்பாட்டுத் திணைக்கள நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் Basil Rajapaksa பெசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு இன்று (17) Colombo Fort Magistrate’s Court கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Read More

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள்  தங்கத்தைத் தேடி சம்மாந்துறையில்   அகழ்வு நடவடிக்கை

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை  பொலிஸ் பிரிவிலுள்ள   தொய்யும் வட்டை கீழ் கண்டம் பகுதியில் தனியார் வயல்  காணியொன்றில் இன்று புதன்கிழமை(17)  அகழ்வுப் பணி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அம்பாறை விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு  கிடைத்த தகவலின் பிரகாரம் நீதிமன்ற உத்தரவுக்கமைய  மேற்குறித்த அகழ்வு பணி மேற்கொள்ளப்பட்டது.  இக்காணியில் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள்  நிலத்தில் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை புதைத்து  மறைத்து வைத்துள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் இந்த  அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குறித்த […]

Read More

யோஷித ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ஷ இன்று (17) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான போதே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

Read More

மருதமுனைக்கு தனியான நகரசபை வேண்டும்–அனைத்துப் பள்ளிவாசல் அமைய செயற்பாட்டாளர் எம்.ஐ.எம். முஹர்ரப்

பாறுக் ஷிஹான் மருதமுனைக்கான தனியான நிர்வாக அலகு வேண்டும்-மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் அமையம் மருதமுனைக்கான தனியான நிர்வாக அலகு வேண்டும்.அதிகாரப் பகிர்வின் ஊடாக இதனைப் பெற்று இன்னும் எங்கள் மக்களின் தேவைகளை சிறப்பாகச் செய்ய வேண்டும் என மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் அமைய செயற்பாட்டாளர் எம்.ஐ.எம். முஹர்ரப் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் மருதமுனை பிரதேசத்திற்கான தனியான நகர சபையை வலியுறுத்தி விசேட ஊடகவியலாளர் மாநாடு ஒன்றினை செவ்வாய்க்கிழமை(16) இரவு மருதமுனை தனியார் விடுதியில் நடைபெற்ற போது மேற்கண்டவாறு […]

Read More

பிரான்சில் ஜி7 உச்சிமாநாடு ஆரம்பம்

பிரான்சின் எவியான்-லெ-பெய்ன்ஸ் நகரில் ஜி7 நாடாளுமன்றத் தலைவர்களின் உச்சிமாநாடு செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்கா – ஈரான் இடையேயான புதிய அமைதி ஒப்பந்தம் மற்றும் ரஷ்யா – உக்ரைன் போர் ஆகிய விவகாரங்கள் முதன்மைப் பேசுபொருளாக உருவெடுத்துள்ளன. மாநாட்டை நடத்தும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன், மத்திய கிழக்கில் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள ஆரம்பகட்ட உடன்பாட்டை விரைந்து இறுதிசெய்ய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் […]

Read More