கனடா, செப்டெம்பர் 03:
கிழக்கு இலங்கை குழந்தைகள் மேம்பாட்டுச் சங்கம் – கனடா (ChIDAES-Canada) அமைப்பின் 21வது ஆண்டு விழா மற்றும் 2026ஆம் ஆண்டிற்கான வருடாந்தக் கூடுகை எதிர்வரும் செப்டெம்பர் 12ஆம் திகதி சனிக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது.
“21 ஆண்டுகள் – அன்பால் இணைந்த பயணம்!” என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ள இந்நிகழ்வு, மாலை 5.30 மணி முதல் Church of St. Stephen, 2259 Jane Street, North York, ON M3M 1A6 என்ற முகவரியில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் நட்பு ரீதியான சந்திப்புகள், கலை நிகழ்ச்சிகள், சுவையான இரவு உணவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கிழக்கு இலங்கையைச் சேர்ந்தவர்களும், ChIDAES-Canada அமைப்பின் ஆதரவாளர்களும், நண்பர்களும், நலன்விரும்பிகளும் பெருமளவில் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்நிகழ்விற்கான நுழைவு வழக்கம்போல முற்றிலும் இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
