
வெளியாகிய தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கல்முனை தமிழ் கோட்டத்தில் 97 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தி அடைந்துள்ளார்கள். மாணவர்களுக்கு கோட்டக்கல்விப்பணிப்பாளர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்
70 புள்ளிகளுக்கு மேல் 303 மாணவர்களும், 70 புள்ளிகளுக்கு கீழ் 32 மாணவர்களும் பெற்றுள்ளனர்.
மொத்தம் 432 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில், 92.59% சித்தி வீதம் பதிவாகியிருப்பது கல்முனை தமிழ் கோட்டத்தில் சிறப்பான பெறுபேறாகக் கருதப்படுகிறது.
பாடசாலைகளின் சித்தி அடைந்த மாணவர்களும் எண்ணிக்கை வருமாறு
கார்மேல் பற்றிமா – 74
உவெஸ்லி -6
விவேகானந்தா -5
பெரிய நீலாவணை விஷ்ணு 4
பாண்டிருப்பு மகா விஷ்ணு -3
இராம கிருஷ்ண மிஷன் -2
மாமாங்கம் -1
கணேஷா – 1
நாவலர் – 1
