September 15, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > கனடாவில் சிடாஸ் அமைப்பின் 21வது ஆண்டு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது!

கனடாவில் சிடாஸ் அமைப்பின் 21வது ஆண்டு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது!

கனடாவில் சிடாஸ் அமைப்பின் 21வது ஆண்டு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது!

கிழக்கு இலங்கை குழந்தைகள் மேம்பாட்டுச் சங்கம் – கனடா chidaes Canada) அமைப்பின் 21வது ஆண்டு விழா மற்றும் 2026ஆம் ஆண்டிற்கான வருடாந்தக் கூடுகை, செப்டெம்பர் 12ஆம் திகதி சனிக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

அமைப்பின் தலைவர் திரு. நோ. விஜயரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, “21 ஆண்டுகள் – அன்பால் இணைந்த பயணம்!” என்ற கருப்பொருளில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நட்புறவுச் சந்திப்புகள், கலை நிகழ்ச்சிகள், சுவையான இரவு உணவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கிழக்கு இலங்கையைச் சேர்ந்தவர்களும், CIDAAS-Canada அமைப்பின் ஆதரவாளர்கள், நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகளும் பெருமளவில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். அறிவிப்பாளரும் யூரியுட்பபெருமான சந்துருவும் கலந்து கொண்டிருந்தார்

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக, அமெரிக்காவின் ஸ்டோக் யூனிட் யுனிட்டின் பணிப்பாளரும், குயின்ஸ், நியூயோர்க்கைச் சேர்ந்த புகழ்பெற்ற நரம்பியல் நிபுணருமான திரு. நந்தகுமார் தம்பிராஜா கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.

அத்துடன், கல்ஃப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கலாநிதி நரேஷ் தேவதாசன் மற்றும் அவரது மனைவியும், குடும்ப வைத்திய அதிகாரி டாக்டர் சாந்தி முத்துலிங்கம், இதய வைத்திய நிபுணர் டாக்டர் வரதராஜன் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டு விழாவிற்கு பெருமை சேர்த்தனர்.

சமூக சேவைத் துறையில் தொடர்ச்சியாகத் தொண்டாற்றி வரும் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் வகையில், இவ்வாண்டிற்கான சமூக சேவை விருதுகள் வழங்கப்பட்டன.

இதன்போது உதயன் பத்திரிகையின் ஆசிரியர் திரு. லோகேந்திரலிங்கம் மற்றும் திரு. பாபு வசந்தகுமார் ஆகியோர் சமூக சேவைக்கான விருதுகளைப் பெற்றுக்கொண்டனர். விருது பெற்றவர்களுக்கு விசு கணபதிப்பிள்ளை மற்றும் சசீந்திரன் வீரசிங்கம் ( chidaes செயலாளர்) ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

அதேவேளை, விழாவில் கலந்துகொண்ட பிரதம அதிதி உள்ளிட்ட அனைத்து அதிதிகளும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

விழாவின் ஆன்மாவாக விளங்கிய கலை நிகழ்ச்சிகள், மன்றக் கலைஞர்களின் அயராத உழைப்பிலும் திறமையிலும் மிகச் சிறப்பாக அரங்கேற்றப்பட்டு, பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தன.

இந்நிகழ்வின் வெற்றிக்காக பலரும் தாராளமாக நிதி உதவிகளை வழங்கியிருந்ததுடன், நிதி சேகரிப்புக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஏலப்பொதி விற்பனையும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிகழ்ச்சிகளின் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்புப் பணிகளை சஞ்சய் அவர்கள் மிகச் சிறப்பாகவும் பொறுப்புடனும் கையாண்டார்.

இதன்போது, மன்றத்தின் செயலாளர் திரு. சசி, பொருளாளர் திரு. ஜீவா மாணிக்கம் உள்ளிட்ட அனைத்து மன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டனர்.

அத்துடன், பொருளாளர் திரு. ஜீவா மாணிக்கம் அமைப்பின் கணக்கறிக்கையை சமர்ப்பித்ததுடன், திரு. புவனேஸ்வரன் (புவி) கனகலிங்கம் நன்றியுரையை வழங்கினார்.

மன்றத்தின் செயலாளர், பொருளாளர் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் ஒரு குடும்பமாக, மனம் ஒன்றிணைந்து, ஒருமித்த கருத்துடன் மேற்கொண்ட கூட்டு முயற்சியே இவ்விழாவின் அபரிமிதமான வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது

ஒவ்வொரு நிகழ்வும் மிக நேர்த்தியாகவும் திட்டமிட்ட முறையிலும் சிறப்பாக நிறைவேற்றப்பட்ட இந்த 21வது ஆண்டு விழா, சிடாஸ் கனடா அமைப்பின் வரலாற்றில் மற்றொரு பொன்னான மைல்கல்லாகப் பதிந்தது என தலைவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சி தொகுப்பு சஞ்சய்

கீழ் உள்ள இணைப்பில் அனைத்து புகைப்படங்களையும் பார்வையிடலாம் https://krvision.smugmug.com/2026/ChiDAES-2026/n-rSv56S

கீழ் உள்ள இணைப்பில் அனைத்து புகைப்படங்களையும் பார்வையிடலாம் https://krvision.smugmug.com/2026/ChiDAES-2026/n-rSv56S

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *