September 15, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: admin

கல்முனை வடக்கு பிரதேச கலாசார அதிகார சபையை மீளமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்

கல்முனை வடக்கு பிரதேசத்தில் பிரதேச கலாசார அதிகார சபையை மீளமைப்பது தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் 10ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளரின் DCA/07/04/CB இலக்க 2026.04.10 திகதிய 03/2026 சுற்றுநிருபத்திற்கு அமைவாக, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் 2016ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட யாப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பிரதேச ரீதியான கலாசார அதிகார சபைகள் கடந்த 10 வருடங்களாக செயற்பட்டு வந்துள்ளன. இந்நிலையில், கடந்த 2026.04.20ஆம் திகதியுடன் குறித்த கலாசார அதிகார சபைகளின் அதிகாரங்கள் அனைத்தும் […]

Read More

வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தின் கல்விப் பயணத்தில் மேலும் ஒரு சாதனை!

வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தின் கல்விப் பயணத்தில் மேலும் ஒரு சாதனை! க. டினேஸ் வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயம், இம்முறை நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பான பெறுபேற்றைப் பதிவு செய்து கல்வித்துறையில் மேலும் ஒரு சாதனையை நிலைநாட்டியுள்ளது. பாடசாலையில் இருந்து பரீட்சைக்குத் தோற்றிய 43 மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று 100 சதவீத சித்தியை பெற்றுள்ளனர். இதேவேளை, அவர்களில் 7 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். […]

Read More

அம்பாறை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம்: செப்டம்பர் 13இல் பக்தர்களின் விசேட பாதயாத்திரை.

(செல்வி வினாயகமூர்த்தி) ​வரலாற்றுச் சிறப்புமிக்க அம்பாறை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா வெள்ளிக்கிழமை (04) கொடியேற்றத்துடன் வெகுவிமர்சையாக ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. வரும் செப்டம்பர் 14ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் விழா நிறைவடையவுள்ள நிலையில், இதனையொட்டி செப்டம்பர் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் பங்கேற்கும் விசேட பாதயாத்திரை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ​இப்பாதயாத்திரையில் அம்பாறை, அக்கரைப்பற்று, திருக்கோவில் உள்ளிட்ட பல பகுதிகளையும் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அன்றைய தினம் அதிகாலை 5.00 […]

Read More

ஞாயிறன்று காரைதீவு -அம்பாறை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய புனித பாதயாத்திரை 

(வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு காரைதீவில் இருந்து “விழிப்புணர்வு புனித பாதயாத்திரை ” எதிர்வரும் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. அம்பாறை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 04.09.2026 அன்று திருக்கொடியேற்றத்துடன் பக்திபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் 13.09.2026 ஞாயிற்றுக்கிழமை புனித பாதயாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  திருக்கோவில், அக்கரைப்பற்று, கல்முனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, மணற்சேனை, சேனைக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பக்த அடியார்கள் இந்தப் பாதயாத்திரையில் இணைந்து […]

Read More

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலய மாணவர்கள் 100 வீதம் சித்தி

இம்முறை வெளியிடப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலயத்தில் பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர். அந்த வகையில், சிவகுமார் டக்ஷயன் என்ற மாணவன் 148 வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதுடன், பரீட்சைக்குத் தோற்றிய ஏனைய ஆறு மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர். இதன் மூலம், பாடசாலை வரலாற்றில் இம்முறை முதன்முறையாக 100 வீத சித்தி பெறப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் திரு. சி. புவனேஸ்வரன் கல்முனை நெற்றுக்கு […]

Read More

சர்வதேச எழுத்தறிவு தினம்: திருக்கோவில் கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் பேரணியும் வீதி நாடக நிகழ்வுகளும்!

(செல்வி வினாயகமூர்த்தி) ​சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு, திருக்கோவில் கல்வி வலய முறைசாராக் கல்விப் பிரிவும் திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் தமிழ் மகாவித்தியாலயமும் இணைந்து நடத்திய சிறப்பு விழிப்புணர்வு ஊர்வலமும், மாணவர்களின் வீதி நாடக நிகழ்வுகளும் இன்று (08)செவ்வாய்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றன. ​இவ்வாண்டு சர்வதேச எழுத்தறிவு நாளானது “மக்கள், பூமி மற்றும் செழிப்பிற்கான எழுத்தறிவு” (Literacy for People, Planet and Prosperity) எனும் தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்படுகின்றது. ​இவ்வூர்வலத்தில் திருக்கோவில் கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான […]

Read More

நற்பிட்டிமுனை அல்-அக்ஸா பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களுக்கு கௌரவம்

நற்பிட்டிமுனை அல்-அக்ஸா பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களுக்கு கௌரவம் நண்பர்கள் வட்ட அமைப்பின் ஏற்பாட்டில் பணப்பரிசுகளும் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைப்பு பாறுக் ஷிஹான் நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலயத்தில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த ஐந்து மாணவர்களுக்குப் பணப்பரிசுகளும், பரீட்சைக்குத் தோற்றிய ஏனைய மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு நேற்று (07) பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. நற்பிட்டிமுனை ‘நண்பர்கள் […]

Read More

மாணவர்களை நேரில் சென்று பாராட்டும் சமூகப்பற்றாளர் குகாசன்.

செல்லையா பேரின்பராசா . சமீபத்தில் வெளியான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில்  சித்தியடைந்த எருவில் கண்ணகி மகாவித்தியாலய மாணவர்களை களுவாஞ்சிகுடி கே.எம்.எஸ்.நகைமாளிகை உரிமையாளரும் சமூகப் பற்றாளருமான  எஸ்.குகாசன் இன்று காலை (08.09.2026) நேரில் சென்று பெறுமதி மிக்க பரிசுப் பொருட்களை வழங்கி கௌரவித்தாரென்று  இப் பாடசாலை அதிபர் பேரின்பராசா ரேகாசலன் தெரிவித்தார். இதற்கமைய ஜெயானந்தம் மகினேஷ் (158 புள்ளிகள்) , கமலகாசன் ராகவர்ஷா (146 புள்ளிகள்) , திவிராஜ் டர்ஸ்வனா (140 புள்ளிகள்)  , பிரதீபன் […]

Read More

திருமலை கன்னியா ஆத்மயோக ஞான சபா காயத்ரி பீடத்தில்  13ஆம் திகதி மகா கும்பாபிஷேகம்! – சிறப்புக்கட்டுரை வி.ரி.சகாதேவராஜா

வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா*  _சித்தரின் சூட்சும ஆசியில் எழுந்த சிவபூமியின் ஆன்மீக மகுடம்_ *திருகோணமலை, கன்னியா* – ஆன்மீக பூமியான திருகோணமலையில், காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளின் சூட்சும ஆசியில் உருவான *ஆத்மயோக ஞான சபா காயத்ரி பீட ஆலயத்தின் ஏககுண்ட பக்ஷ மகா கும்பாபிஷேகம்* எதிர்வரும் 13 ஆம் திகதி காலை 9.05-10.30 வரையிலான சுபமுகூர்த்த வேளையில் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.முதல் நாள் 12 ஆம் திகதி எண்ணெய்க் காப்பு சாத்துதல் இடம்பெறும். இருபத்து நான்கு […]

Read More

இன்று பேராதனை 1983/84 அணி சமூக செயற்பாட்டில் ஈடுபட கலந்துரையாடல்!

இன்று பேராதனை 1983/84 அணி சமூக செயற்பாட்டில் ஈடுபட கலந்துரையாடல்! ( வி.ரி.சகாதேவராஜா) பேராதனை பல்கலைக்கழகத்தில் 1983/84 வருடங்களில் கற்ற  அணியினர் இணைந்து சமூக சேவையில் ஈடுபடுவதற்கு வசதியாக காரைதீவில் ஒன்றுகூடலை முன்னெடுத்தனர். இதற்காக கனடாவில் இருந்து காரைதீவுக்கு வந்த வ.வசந்தாதித்தன் ஏற்பாடு செய்த ஒன்றுகூடல் இன்று (8) செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்றது. கண்டி தொடக்கம் திருகோணமலை வரையுள்ள பிரதேசங்களிலிருந்து 25 க்கும் மேற்பட்டவர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டனர். பல சமூக சேவை வேலைத் திட்டங்களை […]

Read More