செல்லையா பேரின்பராசா .
சமீபத்தில் வெளியான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த எருவில் கண்ணகி மகாவித்தியாலய மாணவர்களை களுவாஞ்சிகுடி கே.எம்.எஸ்.நகைமாளிகை உரிமையாளரும் சமூகப் பற்றாளருமான எஸ்.குகாசன் இன்று காலை (08.09.2026) நேரில் சென்று பெறுமதி மிக்க பரிசுப் பொருட்களை வழங்கி கௌரவித்தாரென்று இப் பாடசாலை அதிபர் பேரின்பராசா ரேகாசலன் தெரிவித்தார்.
இதற்கமைய ஜெயானந்தம் மகினேஷ் (158 புள்ளிகள்) , கமலகாசன் ராகவர்ஷா (146 புள்ளிகள்) , திவிராஜ் டர்ஸ்வனா (140 புள்ளிகள்) , பிரதீபன் அமிந்தனா (134 புள்ளிகள்) ஆகிய மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
சமூகப் பற்றாளரான எஸ்.குகாசன் கடந்த காலங்களில் இப் பாடசாலைமாணவர்கள் கல்வி மற்றும் இணைக் கலைத்திட்ட செயற்பாடுகளில் சாதனை படைத்ததை அறிந்தவுடன் இப் பாடசாலைக்கு நேரில் வந்து சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவித்துள்ளாரென்று பாடசாலை சமூகத்தினர் தெரிவிக்கின்றனர்.



