September 15, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > கல்முனை வடக்கு பிரதேச கலாசார அதிகார சபையை மீளமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்

கல்முனை வடக்கு பிரதேச கலாசார அதிகார சபையை மீளமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்

கல்முனை வடக்கு பிரதேசத்தில் பிரதேச கலாசார அதிகார சபையை மீளமைப்பது தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் 10ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளரின் DCA/07/04/CB இலக்க 2026.04.10 திகதிய 03/2026 சுற்றுநிருபத்திற்கு அமைவாக, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் 2016ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட யாப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பிரதேச ரீதியான கலாசார அதிகார சபைகள் கடந்த 10 வருடங்களாக செயற்பட்டு வந்துள்ளன.

இந்நிலையில், கடந்த 2026.04.20ஆம் திகதியுடன் குறித்த கலாசார அதிகார சபைகளின் அதிகாரங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன், 2026.04.21ஆம் திகதி முதல் புதிய யாப்பின் அடிப்படையில் பிரதேச கலாசார சபைகள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், கல்முனை வடக்கு பிரதேசத்தில் புதிய பிரதேச கலாசார சபையை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் 2026.09.10ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு கல்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, பிரதேசத்திலுள்ள அனைத்து கலைஞர்களும் குறித்த கலந்துரையாடலில் தவறாது கலந்துகொள்ளுமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *